நேபாளத்தில் 5 மீட்டர் புத்தர் சிலை அமைக்கவும் அனுமதி மறுப்பு
நேபாளத்தின் சுர்கேட் மாவாட்டத்திலுள்ள, கக்ரே பிஹார் பகுதியில், ஐந்து மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையை அமைக்க அரசு அனுமதி மறுத்துள்ளதை அடுத்து, தலைநகர் காட்மண்டுவில் புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச அலுவலகங்கள் முன்னர் நூற்றுக்கணக்கான பிக்குகளும், பிக்குணிகளும் கூடிய நிலையில் அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்போராட்டம் காரணமாக இரண்டு மணி நேரம் அங்கு போக்குவரத்து தடைபட்டது. கக்ரே பிஹார் பகுதி தமக்கும் புனிதமானது என்று கூறி, சில இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்ததை அடுத்து பணிகள் தடைபட்டன.
ஆனால் அரசோ அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருவதாக் கூறுகிறது. போராடி வரும் பிக்குகளுக்கும் அரசுக்கும் இடையே மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. bbc
எங்கு பார்த்தாலும் பிக்குகள் குழப்பம் பன்றானுகள்
ReplyDelete