முஸ்லிம் காங்கிரஸில் 3 குழுக்கள்
(Sfm) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று குழுக்களை நியமித்துள்ளது.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் மத்திய மாகாணத்துக்கான குழுவும், கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் வடமேல் மாகாணத்துக்கான தேர்தல் நடவடிக்கை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண சபைக்கான தேர்தல் செயற்பாடுகளுக்காக, மூன்று தலைவர்களை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.நபீக் மற்றும் பைசர் காசிம் ஆகியோருடன் மேலும் கட்சியின் அரசியல் உயர் பீடத்தின் உறுப்பினர் ஒருவரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுக்கள் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.
you are more concern about elections.
ReplyDeleteஏற்கெனவே அவியளுக்குள்ள இரிக்கிற குழுக்கள் போதாதாக்கும்.
ReplyDelete