''முடங்கிப்போய் நிற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்'' பகுதி - 2
இந்த நிகழ்வுடன் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இனக்கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. விடுதலைப் புலிகள் முஸ்லிம் கிராமங்களையும் முஸ்லிம்களையும் தாக்கும் போதெல்லாம் கிழக்கின் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கிழக்கில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் தமிழ் கிராமங்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்து தமது பழியைத் தீர்த்துக் கொண்டனர். இந்த தொடர் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் உறவினை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவு சீர்குலைத்தது. ஒரு சமூகம் மற்றைய சமூகத்தை எப்போதும் தனது நிரந்தர பகையாளியாகவே பார்க்கும் ஒரு துரதிஸ்டநிலை உருவானது. இரண்டு சமூகங்களும் எப்போதுமே ஒருவித பதட்டத்துடனேயே தமது நாட்களைக் கடத்தினர்.
இந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராக பலவிதமான தாக்குதல்களும் படுகொலைகளும் நடத்தப்பட்டன. இவற்றில் முழு உலகையுமே அதிரவைத்த இரண்டு தாக்குதல்கள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது. முதல் சம்பவம் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
இதில் ஏறத்தாள 147 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து சரியாக 8 நாட்களின் பின்னர் மற்றுமொரு முஸ்லிம் கிராமமாகிய ஏறாவூரில் நடத்திய தாக்குதலில் ஏறத்தாள 173 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த வகையான தாக்குதல்கள் முஸ்லிம் பிரதேசங்களை அண்டியிருந்த தமிழ் கிராமங்கள் மீதும் எதிரொலிக்கத் தொடங்கியதன் விளைவாக பல தமிழ் கிராமங்கள் மீது ஏற்கனவே குறிப்பிட்டது போல முஸ்லிம் ஊர்காவல் படையினர் விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு பல அப்பாவி தமிழ் பொதுமக்களை கொலை செய்தனர். அவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் (வந்தாறுமூலை) இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புக்காக கூடியிருந்த பல நூற்றுக்கணக்கானவர்களில் ஏறத்தாள 158 அப்பாவித் தமிழ் மக்கள் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுசென்ற பின்னர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு முன்பு 1990 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள வீரமுனை கிராமத்தில் கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த 15 வயதுக்கு மேற்பட்ட 50 க்கும் அதிகமான ஆண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது ஏறாவூர் சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக செய்யப்பட்டதாக பலராலும் குறிப்பிடப்பட்டது.
இவ்வாறு பழிக்குப்பழி எடுக்கும் மனோநிலையில் கிழக்கு மாகாண தமிழர்களும் முஸ்லிம்களும் எதிரெதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை மிகவும் சிறுபான்மையினராக வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மிகவும் அச்சப்பட்டனர். தம்மையும் விடுதலைப் புலிகள் தாக்கத் தொடங்கிவிடுவார்களோ என நினைத்து அச்சப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் தான் 1990 அக்டோபரில் அந்த துயர சம்பவம் இடம்பெற்றது.
தமிழின மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், வடமாகாணத்தை முழுமையாக ஒரு தூய தமிழ் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையில் ஏற்கனவே இந்த மாகாணத்தை விட்டு சிங்கள மக்களை முழுமையாக வெளியேற்றுவதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டிருந்தனர். எஞ்சியிருந்த முஸ்லிம் சமூகத்தையும் வெளியேற்ற சிலர் ஏற்கனவே கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். இந்த எண்ணப்பாட்டிற்குத் தேவையான களத்தினை கிழக்கு மாகாணத்திலே ஒருவரையொருவர் பழிவாங்கும் வகையில் அரங்கேறிய அசாதாரண சூழ்நிலையானது அமைத்துக் கொடுத்தது.
1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி காலையிலேயே அந்த அதிர்ச்சி தரும் பகிரங்க அறிவிப்பை விடுதலைப் புலிகளின் பிரதேச மட்ட தலைவர்கள் அறிவித்தார்கள். யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்துக்கு சகல முஸ்லிம்களையும் ஒன்றுகூடும்படி தமது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தபின்னர் அங்கு கூடிய மக்கள் முன்னிலையில் உரையாற்றிய இளம்பருதி (ஆஞ்சனேயர் என்றும் அழைக்கப்பட்டார்) விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் முடிவினை பகிரங்கமாக அறிவித்ததோடு, அவர்களின் வெளியேற்றத்திற்கு இரண்டு மணித்தியால அவகாசமே கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இம்மக்கள் மீள்வதற்கு முன்னமே குறித்த இந்த கட்டளைக்கு அடிபணியாதவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்ற விடயத்தையும் அவர் கடும் தொனியில் கூறினார். ஏற்கனவே கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளையும் அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த அழிவுகளையும் அறிந்திருந்த இந்த மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த கடுமையான உத்தரவினை ஏற்றுக்கொண்டு செயற்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டு தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்து வந்த அந்த மண்ணை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
வடமாகாணத்தை முழுமையாக ஒரு தூய தமிழ் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையில் ஏற்கனவே இந்த மாகாணத்தை விட்டு சிங்கள மக்களை முழுமையாக வெளியேற்றுவதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டிருந்தனர். எஞ்சியிருந்த முஸ்லிம் சமூகத்தையும் வெளியேற்ற சிலர் ஏற்கனவே கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். இந்த எண்ணப்பாட்டிற்குத் தேவையான களத்தினை கிழக்கு மாகாணத்திலே ஒருவரையொருவர் பழிவாங்கும் வகையில் அரங்கேறிய அசாதாரண சூழ்நிலையானது அமைத்துக் கொடுத்தது.
1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி காலையிலேயே அந்த அதிர்ச்சி தரும் பகிரங்க அறிவிப்பை விடுதலைப் புலிகளின் பிரதேச மட்ட தலைவர்கள் அறிவித்தார்கள். யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்துக்கு சகல முஸ்லிம்களையும் ஒன்றுகூடும்படி தமது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தபின்னர் அங்கு கூடிய மக்கள் முன்னிலையில் உரையாற்றிய இளம்பருதி (ஆஞ்சனேயர் என்றும் அழைக்கப்பட்டார்) விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் முடிவினை பகிரங்கமாக அறிவித்ததோடு, அவர்களின் வெளியேற்றத்திற்கு இரண்டு மணித்தியால அவகாசமே கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இம்மக்கள் மீள்வதற்கு முன்னமே குறித்த இந்த கட்டளைக்கு அடிபணியாதவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்ற விடயத்தையும் அவர் கடும் தொனியில் கூறினார். ஏற்கனவே கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளையும் அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த அழிவுகளையும் அறிந்திருந்த இந்த மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த கடுமையான உத்தரவினை ஏற்றுக்கொண்டு செயற்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டு தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்து வந்த அந்த மண்ணை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

awerkalin thoolwi aththoodu aarampiththu wittathu thamil muslim urawuhali ppirithathatku nanraaha waanki kattikkondener ,thatpoothu arasiyal waathikal ithanai kaila aduthullarkal
ReplyDelete