Header Ads



25 ஆம் திகதி 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை

(ஏ.எல்.ஜுனைதீன்)

     எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மொத்தமாக 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

     இவர்களில் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 396 மாணவர்கள் சிங்கள மொழியிலும் 80 ஆயிரத்து 329 மாணவர்கள் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதுகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

     இப் பரீட்சையை நடத்துவதற்கென நாடுபூராவும் 2,336 பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்


    -----சிராஜ்தீன் சிறோ-----

    ReplyDelete
  2. Thank you sir for your information

    ReplyDelete

Powered by Blogger.