பொத்துவில் வைத்தியசாலையின் பொடுபோக்கு - 2 உயிர்கள் பரிதாப மரணம்..!
(Abdul Samad Mahroof)
பொத்துவில் ஆதர வைத்தியசாலையின் பொடுபோக்கு செயற்பாடு காரணமாக நேற்று (2013.07.16) இரண்டு உயிர்கள் பரிதாப மரணத்தை சுவாசித்துள்ளன.
சம்பவம் பற்றி மேலும் தெரிரிய வருவதாவது....!
ஒரு இளம் கர்ப்பிணிப் பெண் குழந்தைப் பேருக்காக பொத்துவில் ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கடந்த 3 நாட்களாக மிகுந்த அவதிப் பட்டிருக்கிறார். இந்த நிலையில் மகப்பேற்று வைத்திய அதிகாரி தன் பாட்டிலும், ஏனைய வைத்திய அதிகாரிகள், தாதிகள் என அனைவரும் தங்கள் போக்கிலும் என பொடுபோக்காக இருந்திருக்கிறார்கள். அந்த கர்ப்பிணிப் பெண் மிகுந்த வேதனையால் துடித்திருக்கிறார். இவர்களின் பொடுபோக்குத் தனத்தில் அதிருப்தியுற்ற அந்த கர்ப்பிணிப் பெண் தன்னை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பும்படி வேதனை தாங்க முடியாமல் கெஞ்சியிருக்கிறார். சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. அப் பெண்ணின் மீது கருணை கொள்ளவில்லை.
அந்த பெண் இப்படி பெரும் அவதிப்பட காரணம் அவரது வயிற்றில் இருந்த குழந்தை 6 கிலோகிராம் கொண்டதாக இருந்திருக்கிறது. அப்படியாயின் இது வைத்திய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. காரணம் அந்த பெண்ணின் கிளினிக் அட்டையில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அப்பெண்ணின் ஸ்கேனிங் அறிக்கையும் வைத்தியத் துறை அதிகாரிகளின் கையிலேயே இருந்திருக்கும். இந்த நிலையில் இந்த பெண்ணின் பிரசவம் கடினமானதாக இருப்பினும் இதை வெற்றிகரமாக செய்து முடிக்க தங்களால் முடியுமா...? முடியாதா ...?வென்பது அவர்களுக்கு இதனை வைத்து கணக்குப் போட முடிந்திருக்கும். வறட்டு கௌரவத்திற்காக அந்த பெண்ணை அவர் கேட்டுக்கொண்டபடி அவரை மேலதிக துரித நடவடிக்கைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பாமல் இறுதி வரை வைத்திருந்துள்ளார்கள். நிலைமை இக்கட்டாக, தாங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த கர்ப்பிணி பெண்ணும், சிசுவும் மரணிக்கும் தருவாயில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியிருக்கிரார்கள்.
இந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கும், இடைப்பட்ட தூரம் சரியாக 46 கிலோமீட்டர்கள் ஆகும். இது தெரிந்திருந்தும் இந்த பொறுப்பற்ற அதிகாரிகள் இப்படி நடந்து கொண்டது மிகுந்த முட்டாள்தனம், கண்டிக்கத்தக்க மிகக் கொடூரமான செயல் ஆகும்.
அம்பியுலன்ஸ் வண்டியில அந்த கர்ப்பிணி பெண்ணை ஏற்றி அனுப்பிய போது, அம்பியுலன்ஸ் வண்டி நான்கைந்து கிலோமீட்டர் செல்கையிலேயே அம்பியுலன்ஸ் வண்டியினுல்லேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது...!
ஆரம்பத்திலேயே பொத்துவில் வைத்திய அதிகாரிகள் நல்ல சிந்தனையுடன் செயற்பட்டிருப்பின் அப்பெண்ணை முன்கூட்டியே அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியிருக்க முடிந்திருக்கும். அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும். அனால் நடைப்பினமாகும் வரை அவர்களை அனுப்பாது வைத்திருந்துவிட்டு ஆபத்து நெருங்குகையில் தப்பித்துக்கொள்ளவே இறுதியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு பிணமாக அனுப்பியுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களாலும் காப்பாற்ற முடியத அளவுக்கு அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது இதனால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் அந்த பெண்ணை உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்கள். இருப்பினும் என்ன பயன்....? அவரும் உயிர் பிரிந்துவிட்டார். இந்த இரண்டு உயிர்களையும் கொன்று தின்ற பாவம் பொத்துவில் வைத்தியசாலை அதிகாரிகளையே சாரும்....!
பொத்துவில் வைத்தியசாலையில் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லை. அண்மையில்தான் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மகப்பேற்று அரை திறந்து வைக்கப்பட்டது என்று தெரிய வருகிறது. அதிகாரிகள் பொறுப்பற்று இருந்தது, இருந்து வருகின்றமைக்கு சட்ட நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட வேண்டும்...!
சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் சட்டப்படி இதற்கு நடவடிக்கை எடுத்து மேலும் பல உயிர்களை இவர்கள் கொன்று தின்னாமல் இருக்க நடவடிக்கை உடன் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக புலன் விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இது பொத்துவில் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இவர்கள் இந்த சம்பவத்தில் மட்டுமல்ல முன்னும் பல விடயங்களில் பொடுபோக்காகவே இருந்து வந்துள்ளனர். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது . முன்னர் நடந்த பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை....

வைத்தியர்கள் மருத்துவத்தை மட்டும் கற்றால் போதாது, மனித நோயத்தையும் படிக்க வேண்டும். அத்துடன் அநோக வைத்தியசாலைகளில் கடமைபுரியும் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் விசறு நாய் போன்று மிகக் கேவலமாக பொது மக்களிடம் பாய்ந்து விழுகின்றனர்.இந்நிலை மாற்றப் படவேண்டும்.
ReplyDeleteஇன்னலிள்ளஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன். இது மிகவும் வருத்ததிற்கும் கண்டிப்புக்குமுரிய விடயம். இது தொடர்பாக கடமையை மீறிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தண்டனை பெற்றுத்தர உரிய அதிகாரிகள் செயற்படவேண்டும். மேலும் இவ்வாறான துர்சம்பவங்கள் நிகழாமல் வைத்தியசாலையின் நிர்வாகமுறை திருத்தியமைக்கப்படுவதோடு தாதியர்களும் வைத்தியர்களும் கடமையுனர்வோடும் சமூகப் பொறுப்போடும் இரக்க சுபாவத்தோடும் செயற்படும்படியான மனநலப் பயிற்சியும் வழங்கப்படுவது காலத்தின் தேவை.
ReplyDeletekaddayamaha wisaranai seaiya weandum.... thankaludaiya poruppugalai sariyahawum unmaiyahawum seaiya mudiyathawarkalukku appadiyana wealaikal iruppathaium ,koduppathaiyum thadukka weandum,,,, manithanin uyiraik kaappartuwathe waithiya saalaiyin nokkamaha irukkirathu maaraha kolluwathu alla.....
ReplyDeletethangalidam wasathikal illatha santharppathil wasathikal nirainthum PUTHISALIYAN MARUTHUWARKAL, MANITHAPIMANA THATHIKAL konda waithiya salaikku auppumaru keaddukk kollhinren....
kuritha thodarpudiya ATHIKARIKALUKKU EANTHA ORU SALUHAIYUM INTRI THAHUNTHA NADAWADIKKAI EADUKKA WEANDUM .......
COLOMBO THEHIWALA ZOO WILL NALLA WEALAI IRUKKUM MARTIK KODUKKALAM APPADIYANA PORUPPILLATHA ATHIKARIKALUKKU,,,,,
வேறு ஒன்ம்மில்லை வைத்தியர் சங்கம் பார்த்துக்கொள்ளும் என்ற என்னம்.
ReplyDeleteOk i understand the doctors and nureses are not take care well this pregnat mother......so why don´t them self shouldn´t go big hospital before baby born?Why not the baby husband or relatives not do during the hospital visiting periouds nothing.
ReplyDeleteஅதிகாரிகளின் போடுபோக்களும், முட்டாள் தனமான செயலாலும் இரண்டு உயிர்களை கொலை செய்து இருக்கிறார்கள்.
ReplyDeleteயா அல்லாஹ்! அந்த குழந்தையும் தாயும் என்ன வேதனைப் பட்டிருப்பார்கள் , இதை கேட்கும் போதே எம்மால் தங்க முடியவில்லையே.!!
இந்த உலகில் நீங்கள் தப்பலாம் , அனால் அல்லாஹிவின் பிடி மிகக்
நாம் என்ன செய்ய, இறந்தது இறந்ததுதான் என்பர் டாக்டர் ........
ReplyDeleteஇன்னும் சிலரோ தலை விதி என்பார்கள்.......
ஆனால் அல்லாஹ்வின் தீர்ப்பு இந்த புனித ரமலானில் போடு போக்காக இருந்தவர்களுக்கு நிச்சயம் கிடைக்க துஆ செய்து பிரார்த்தனை செய்து கொள்வோம் பொத்துவில் நலன் விரும்பிகளே இதையாவது செயுங்கள்
இந்த பொறுப்பற்ற வைத்திய அதிகாரிகளையும், தாதிகளையும் உயிருடன் புதைக்க வேண்டும்..இது தான் பொருத்தமான தண்டனை..!
ReplyDeleteThe management of this hospital will be punished after deepest investigation as soon as possible.
ReplyDeleteThe HS,Officers, Doctors, Nursers, Mid wives, Attendants, Labourers, should be inquried trustfully.
So, our minister, Hon.M.S.Uthuma lebbe.
Please, where's your action? Keep action please.
He will interven on this issue also? Please help this innocent family as soon as possible.
It's a good chance for you.
You always cross on Infrastructure, Agriculture, Fishing, Village Developing, Family matters, Education and Health ect.... Isn't it so?
இப்படி பட்ட வைத்தியர்கள் இருக்கும் வரைக்கும் இன்னும் பல உயிர்கள் பழியாகும். எனவே இப்படி பட்ட வைத்தியர்கள் பேய் ஓட்ட கூட லாயக்கில்லை. இவர்களை வேலையில் இருந்து நீக்குவது தான் நம் ஒற்றுமை கலந்திருக்கிறது. يا الل
ReplyDeleteபெற்றோர்கள் பணம் பார்பதற்கும், பதவிகளில் பெருமைப்பட்டுக்கொள்வதற்குமே, தமது பிள்ளைகளை இதுபோன்ற துறைகளில் படிக்கவைக்கிறார்கள்.
ReplyDeleteபெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு வெறுமனே ஏட்டுக்கல்வியைமட்டும் சொல்லித்தராமல், எக்காலத்திலும் மனிதநேயத்தையும் சொல்லிக்கொடுத்து வழரந்து அளாகும்போது படித்த கல்வி, பட்டம், பதவிகளோடு நல்லமனிதனாகவும் வாழட்டும்.
"இல்லையென்றால் இப்படிப்பட்ட பாவச்செயல்களைச் செய்யும் பிள்ளைகளின் பாவம் உங்களையும் தொடர்ந்துகொண்டே இருக்கும்"
1.) சார் இது ஊரில் உள்ள அரசியல் வாதிகளின் சதி திட்டம் எண்டும் சொல்லலாம்.?
ReplyDelete2). இங்குள்ள வைத்தியர்கள் வீட்டுலே அதிஹ வருமானம் பெருகின்றார்ஹல் அவர்ஹல் எப்படி அங்கே சேவை புரிவார்ஹல் சார் ?
3). காரணம் கல்வி அறிவு இல்லை என்றே சொல்லலாம்.
4). அங்குள்ள வைத்தியசாலைல் காவலாளிகள் வைத்திய பொறுப்பை செய்து வருகின்றார்கள் அப்படி இருக்கும் போது எப்படி அந்த வைத்தியசாலை முன்னேறும் சார்?
5).இதையெல்லாம் யாரு சார் கேட்பாங்க?
மாற்று சகோதர இனத்தவருக்கு செய்யும் தொழில் தெய்வம் ஆனால் நம்மவருக்கு அப்படி ஒரு மன நிலை இல்லை,நிரந்தர வருமான உத்தியோகம் பகுதி நேர வேலையாகவும் தங்கள் தனிப்பட்ட சம்பாதிப்பு முழு நேர வேலையாகவும் அமைத்ததன் விளைவே இது ...வைத்தியசாலை மட்டுமல்ல நம்மவர் பெருன்பானமையாக இருக்கும் அனைத்து நிறுவனங்களின் நிலைமையும் அது தான்...பாடசாலை முதல் பள்ளிவாசல்கள் வரை என்றாலும் பொருத்தமே அதிலும் அரசியல்வாதிகள் ஒரு படி மேல்.
ReplyDelete