Header Ads



மனிதநேயம் மரணித்துவிட்டதா..?

(Zuhair Ali (Ghafoori)

நம் மனித நேயம் மரணித்து குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டதை நினைத்து நிச்சயம் இது போன்ற ஒரு கால கட்டத்தில் சிந்தித்து ,மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்  தள்ளப்பட்டு இருக்குறோம் என்றால் மிகையாகது.

 மாற்று  மத நண்பர்களின் மனித நேயத்துடன் அனுப்பும் எதனையும் நாம் இயல்பாகவே விரும்புவதில்லை  எனினும்  ஏற்பது தவறாகாது. அதனை நாம்  உபயோகிக்கலாமா என்பதில் நாம் தான் கவனம் செலுத்த வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களிடம் சில சில்க் உடைகள் அள்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்டார்கள். அதில் ஒன்றை உமர்(ரழி) அவர்களுக்கு ரசூல்(ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அதற்கு உமர்(ரழி) அவர்கள், நமக்கு ஹராமாக்கப்பட்ட பட்டு(சில்க்) உடையை எனக்கு தருகிறீர்களே? என வினவினார்கள்.

ரசூல்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதனை நீர் உபயோகிக்க நான் தரவில்லை. அதனை நீ விற்றுவிடவோ அல்லது அதனை உபயோகிப்பவருக்கு கொடுத்து விடவோ கொடுத்தேன் என்றார்கள். அதனடிப்படையில் உமர்(ரழி) அவர்கள் தனது சகோதரருக்கு-இஸ்லாத்தில் இணையாமல் மக்காவிலிருந்தவருக்கு-அனுப்பி வைத்தார் (முஸ்லிம்)

இந்நபிமொழி மூலம் நம் எவ்வாறு மற்று மதத்தினருடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்  சமூக மேன்படையும் அழகுற எடுத்துக்காட்டுகிறது ஆக நாம் ஒரு வேற்று மத நாட்டில்   வாழ்வதனால் கொஞ்சம் மனித நேயத்துடன் வாழ பழகிக்கொண்டு ஒரு உதாரனப் புருஷராக விளங்க வேண்டும்.. இருப்பினும் சுருக்கமாக தெளிவு படுத்தின்  தனக்கு தரப்படும் அன்பளிப்பு- பட்டு துணி-இஸ்லாமிய சட்டப்படி தனக்கு ஹராமானது என்பதை ரசூல்(ஸல்) அவர்கள் அறிந்திருந்தாலும் அதனை அன்பளிப்பளித்தவரின் கொள்கையுடன் மோதவிட்டு மனித நேயத்தை பாழ்படுத்தவில்லை. அவரது கொள்கைபடி கொடுத்ததை மனமுவந்து பெற்றக் கொண்டார்கள். அதனை உபயோகிக்கும் விதத்தில் நமது கொள்கையை தெளிவு படுத்தினார்கள். இதே நிலையை நாம் பின்பற்றலாமே!

'கிழக்கும் மேற்கும்' என்ற தனது பயணப் புத்தகத்தில் விவேகானந்தர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார். ‘’இஸ்லாம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள மக்களை அரவணைத்து வாழ்வளித்தது’’

மற்றுமொரு சம்பவும் இன்னும் விரிவுபடுத்தும் -ஒருவர்  தனது தோட்டத்தில் உள்ள பே ரீச்சம் பழங்களை கொண்டு வந்து கொடுக்கிறார் .. சகாபாக்கள் எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுகிறார்கள்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி தனது தோட்டத்தில் விளைந்த முதலாவது திராட்ச்சை குலையை ரசூலுல்லாஹ்வுக்கு கொடுக்கிறாள். ரசூளுல்லாவும் அதைப் பெற்று மகிழ்ச்சியோடு அனைத்தையுமே மெது மெதுவாக அனைத்தையும் சாப்பிடுகிறார்கள் .அந்தப் பெண்மணி மகிச்சியோடு அங்கிருந்து போகிறாள்.நபித் தோழர்களுக்கு ஆச்சரியம் .! வழமையாக நீங்கள் பகிர்ந்துதான் சாப்பிடுவீர்கள் .இன்று நீங்கள் ஏன் எங்களுக்குத் தராமல் எல்லாவற்றையும் சாப்பிடுகிறீர்கள் ...! என்றே .. கேட்டே விட்டார்கள் ,அப்போது ரசூலுல்லா : ஒரு பழத்தை எடுத்து ஒரு நண்பருக்கு வழங்கினார்கள் ,அவர் சாப்பிட்ட உடனே துப்பிவிட்டார் ""பச்சப் புளி ""என்றார் ரசூலுல்லாஹ் சொன்னார்கள் அந்த மூதாட்டி ஒரு யூதப் பெண்மணி ... அவளுடைய மனது புண்படும்படி நீங்கள் நடந்து கொள்வீர்களோ என்று பயந்துதான் நான் அனைத்தையும் சாப்பிட்டேன் என்றார்கள்.

மாற்று  மத நண்பர்களிடையே நமது கொள்கையை நாம் தெளிவு படுத்தினால் அவர்களே பூஜை செய்த உணவுகளுக்கு பதிலாக சாதாரண உணவுகளை நமக்கு தருவார்கள். இதனை உண்பது தவறல்லவே! ஏனெனில் யூதப் பெண்மணி வீட்டு விருந்தையே ரசூல்(ஸல்) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்களே! அதுவும் மனித நேயத்தின் அடிப்படையிலானவைதான் என்பதை அறியுங்கள். இந்த முன் மாதிரியை நாம் பின்பற்றலாமே! முயற்சியுங்கள். எங்களது அனுபவத்தில் இம்முன்மாதிரி நல்ல பலனளித்திருப்பதை நேரில் கண்டு வருகிறோம். மாற்று மதத்தினருடனும் மனித நேயத்துடன் பழகுங்கள். அதன் மூலம் இஸ்லாமிய கொள்கைகளை நடை முறையில் பரப்புங்கள். இதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும் . மரணித்த நம் மனித நேயம் மீண்டும் உயிர்ப்பித்து நாம் மாற்று மதத்தினருக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும் 

இந்த நாட்டில் அமைதியாக வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் ……..

No comments

Powered by Blogger.