இன்று முதல் 21ஆம் திகதி வரை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடனம்
(Nf) இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சமூகத்திலிருந்து ஒதுங்கிவாழும் மக்கள் மீண்டும் சமூகமயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி ஊடாக சமூக நல்லிணக்கம் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய நல்லிணக்க வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பாடசாலைகளை மையமாகக் கொண்டு போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார கூறியுள்ளார்.
சமூக உரிமைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சமூகத்துடன் இணைவதில் காணப்படுகின்ற பொருளாதார சமூக மற்றும் மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.jpg)
ஐயா உங்கள்போன்ற தலைவர்கள் இந்த நாட்டை ஆளவேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். எதிர்வரும் பொதுத்தேர்தல்களில் நீங்கள் போட்டியிடவேண்டும். மக்கள் விட்ட தவறைத்திருத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கட்டும்.
ReplyDelete