Header Ads



அமெரிக்க இரகசியங்களை அம்பலப்படுத்தியவர் அடைக்கலம் கேட்டு 19 நாடுகளுக்கு விண்ணப்பம்

அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென் (29). சமீபத்தில், அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். முதலில் ஹாங்காங்கில் தஞ்ச‌மடைந்திருந்த அவர், தற்போது இவர், ரஷ்யாவில் பதுங்கியுள்ளார். இவரை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. இந்நிலையில் அடைக்கலம் கேட்டு இந்தியா உள்பட 19 நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து விக்கிலீக்சின் சட்ட ஆலோசகர் ஷராக் ஹாரிசன், ஸ்னோடென் சார்பில், அடைக்கலம் கேட்டு இந்தியா, ஆஸ்திரேலியா, நார்வே,ஸ்பெயின் உள்பட 19 நாட்டு தூதரகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.