Header Ads



பிரான்ஸில் சவூதி அரேபிய அதிகாரியிடமிருந்து 1.5 கோடி திருட்டு


(INNE) பிரான்சுக்கு வருகை புரிந்த சவூதி அரேபியாவைச் சார்ந்த அதிகாரி ஒருவரிடமிருந்து 1.5 கோடி ரூபாயை பிரான்சு நாட்டைச் சார்ந்த போலி காவல்துறையினர் திருடியுள்ளனர்.

சவூதி இளைஞர் மற்றும் விளையாட்டு துறை உயர் அதிகாரி ஒருவர் பிரான்சு நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்சின் "லீ போர்கேட்" விமான நிலையத்தில் இறங்கியவுடன் தான் தங்க வேண்டிய விடுதிக்கு காரில் சென்றுள்ளார்.

விடுதிக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து அதிகமுள்ள ஏ1 நெடுஞ்சாலையில் சைரன் விளக்குகள் மின்ன போலீஸ் என எழுதப்பட்ட வாகனத்தில் வந்த துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் சவூதி அதிகாரி சென்ற வாகனத்தை வழி மறித்தனர்.

சவூதி அதிகாரியின் வாகனத்தைச் சோதனையிட்ட போது உள்ளேயிருந்த 9,58,000 திர்ஹம்கள் (1.53 கோடி இந்திய ரூபாய்) உள்ள சூட்கேஸை காவல்துறையினர் போல் வேடமிட்டவர்கள் கடத்தி சென்றனர். இது தொடர்பாக பிரான்சு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

No comments

Powered by Blogger.