சவுதி அரேபியாவிலுள்ள 12 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்ப பதிவு
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மேலும் 12 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்த 2,400 இலங்கையர்கள் இதுவரை வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தில் நாடு திரும்பியிருந்தனர்.
சவுதி அரேபியா வழங்கியிருந்த பொது மன்னிப்புக் காலம் இன்றைய தினம் நிறைவடையவிருந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்கள், உடனடியாக அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு பணியகம் அறிவித்துள்ளது.
.jpg)
Post a Comment