Header Ads



தொழிற்பயிற்சிகளுக்கு 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

(ஏ.எல்.நிப்றாஸ்)

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் 14 தொழிற்பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் 36 பயிற்சிநெறிகளுக்கு இம்மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. 

இக் கற்கைநெறிகளில் பெருமளவானவை தேசிய தொழில்சார் தகமை (என்.வி.கியு.) மட்டம் 3 மற்றும் 4 அடிப்படையிலானதும் 3 மற்றும் 6 மாத பயிற்சிக் காலத்தைக் கொண்டவையுமாகும்.

இதன்பிரகாரம், வந்தாறுமூலை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய சான்றிதழ் மட்ட கற்கைகளான அலங்கரிப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், இயந்திரவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், முச்சக்கர வண்டி திருத்துனர் ஆகியவற்றுக்கும் பட்டிப்பளை தொழிற்பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படுகின்ற தேசிய சான்றிதழ் தர கற்கைகளான மின் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், தொழில்சார் தையல் ஆகியவற்றுக்கும் வாகரையிலுள்ள தொ.ப.நிலையத்தின் கட்டடக் கைவினைஞர் மற்றும் மரக் கைவினைஞர் போன்ற தேசிய சான்றிதழ் மட்டத்திலான கற்கைகளுக்கும் ஓந்தாச்சிமடம் நிலையத்தினால் நடாத்தப்படும் தேசிய சான்றிதழ் மட்டத்திலான முச்சக்கரவண்டி திருத்துனர், படகு இயந்திர தொழில்நுட்பம், அலுமீனியம் பொருத்துனர் ஆகிய தொழிற்பயிற்சி கற்கைகளுக்கும் களுவாஞ்சிக்குடி தொ.ப. நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நீர்க்குழாய் பொருத்துனர், தையல் கலைஞர், மின் தொழில்நுட்பவியலாளர், ஒட்டுவேலை செய்பவர் போன்ற தேசிய சான்றிதழ் மட்ட பயிற்சிநெறிகளுக்கும் வவுணதீவு நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய சான்றிதழ் தரத்திலான மரக் கைவினைஞர், கட்டிடக் கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பயிற்சிகளுக்கும் கிரான் பிரதேசத்திலுள்ள தொ.ப.நிலையத்தின் கட்டிடக் கைவினைஞர் மற்றும் நீர்க்குழாய் பொருத்துனர் போன்ற தேசிய சான்றிதழ் தராதரமுள்ள பயிற்சிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். 

அதேபான்று ஆரையம்பதி தொழிற்பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் தேசிய சான்றிதழ் கற்கைகளான அலங்கரிப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறிகளுக்கும் ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி தொ.ப. நிலையங்களால் வழங்கப்படுகின்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (தேசிய சான்றிதழ்) கற்கைக்கும் வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் தரத்திலான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர் போன்ற பயிற்சிகளுக்கும் வெல்லாவெளி பயிற்சி நிலையத்தின் தேசிய சான்றிதழ் கற்கைளான நீர்க்குழாய் பொருத்துனர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், தையல் கலைஞர், மரக் கைவினைஞர் போன்ற பயிற்சி நெறிகளுக்கும் கல்லடி பயிற்சி நிலையத்தினால் அளிக்கப்படுகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (தேசிய சான்றிதழ்) பயிற்சி நெறிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்பங்களை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம், ஏ.பீ.சீ. வீதி, வந்தாறுமூலை என்ற முகவரிக்கு அனுப்ப முடியும். 

No comments

Powered by Blogger.