Header Ads



முதலமைச்சர் பதவி குறித்து எனக்கு தெரியாது - அமீர் அலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியிருந்து நஜீப் ஏ. மஜீத்தை நீக்கிவிட்டு, முதலமைச்சராகும் வாய்ப்பு அமீர் அலிக்கு காணப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.

இதுபற்றி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்து வெளியிட்ட அமீர் அலி,

நான் அமைச்சராக இருந்தபோதும் மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றபோதும் மக்களுக்காக எனது சேவைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மக்களுக்கான எனது சேவைகள் தொடரும். மக்கள் நலனுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

கிழக்கு மாகா ண முதலமைச்சராகும் வாய்ப்பு எனக்கு இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் அதனை ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டடேன்.

கிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களுடனும் சுமூக உறவு உள்ளது. பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுகிறேன். கூட்டுப்பொறுப்புகளை கடைபிடிக்கிறேன் எனவும் அமீர் அலி மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.