Header Ads



18வது உலக இளைஞர் மாநாட்டு கலந்துரையாடல் - ஹக்கீம், அதாவுல்லா பங்கேற்பு


ஈக்குவடோர் நாட்டில் இவ்வாண்டு நடைபெறவுள்ள 18 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான மாநாடு தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடலில் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த மன்றத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தலைமையில் 19-06-2013 இடம்பெற்றது.

இதன்போது 18 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான மாநாடு தொடர்பில் இலங்கை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு இம் முன்னேற்பாட்டுக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்பிரகாரம் ஈக்குவடோரில் நடைபெறும் இம்மாநாட்டிலும் பாசிசவாதத்திற்கும், ஏகாதிபத்தியவாதத்திற்கும், ஜனநாயகவிரோதிகள் காலனித்துவவாதத்திற்கும், யுத்தத்திற்கும் பலவந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற கைப்பற்றுதலுக்கும், அநீதியான மாற்றங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் அதேவேளை, சமாதானம், சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றிற்குமாகவும் பிரஸ்தாபிக்கப்படவுள்ளன. 

இவ்வாண்டு டிசம்பர் மாதம் இலத்தீன் அமெரிக்கா நாடான ஈக்குவடோரில் நடைபெறும் இம்மாநாட்டிற்கான இலங்கையிலிருந்தும் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்களான 100 ற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள அதேவேளை, ஏனைய பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்தது.


1 comment:

  1. கீரியும், பாம்பும் ஒன்று சோர்ந்து விட்டதா! அல்ஹம்துலில்லாஹ்.
    (மஹிந்த சிந்தனையின் “பிளவுபடத்தல”; என்பதற்கு ஒரு அடி)

    ReplyDelete

Powered by Blogger.