கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளான சிறுமிக்கு பூவா? தலையா? போடும் வாய்ப்பு கிடைத்தது
உலக புகழ் பெற்ற 'விம்பிள்டன்' ஆடவர் ஒற்றையர் போட்டி வரும் (ஜூலை) மாதம் 7ம் தேதி லண்டனில் உள்ள கிராண்ட் சென்டர் கோர்ட்டில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் முதலில் பந்தை அடிக்கும் வீரரை தேர்ந்தெடுப்பதற்காக, நாணயத்தை சுண்டி 'பூவா? தலையா?' போடும் பாக்கியம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 வயது சிறுமியான பிங்கிக்கு கிடைத்துள்ளது.
பிறந்தபோது மேல் உதடு கோணலாக இருந்த பிங்கிக்கு 4 வயதான போது உதட்டினை சீரமைப்பதற்காக ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனை குறும்பட இயக்குனர் மேகன் மைலன் என்பவர் முழுமையாக படம் பிடித்தார்.
கோணலான உதட்டுடன் பிறந்த அந்த சிறுமி, சக வயது குழந்தைகளின் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளானது, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவளுக்கு ஆபரேஷன் செய்து சராசரி சிறுமியாக மாற்றியது என்ற கதையம்சத்துடன் 39 நிமிடம் ஓடும் வகையிலான 'ஸ்மைல் பிங்கி' என்ற குறும்படத்தை மேகன் ஸ்மைலன் உருவாக்கினார்.
இந்த குறும்படம் 81வது விருது வழங்கும் விழாவில் ஆஸ்கர் விருதினை வென்றது.
இதனையடுத்து, பிங்கிக்கு நட்சத்திர தகுதி கிடைத்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பிங்கிக்கு தற்போது மேலும் ஓர் அரிய பாக்கியம் கிடைத்துள்ளது.
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர்கள் மோதும் லண்டன் விம்பிள்டன் போட்டியில் முதல் சர்வீசை யார் அடிப்பது? என்பதை தேர்வு செய்வதற்காக நாணயத்தை சுண்டிவிட்டு பூவா? தலையா? என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு மிர்சாபூரை சேர்ந்த 9 வயது பிங்கிக்கு கிடைத்தது.

Post a Comment