Header Ads



சிறுநீரகக் கற்கள் யாருக்கெல்லாம் வரும்..?


சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு. அதிலும் கீழ்கண்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு.

1. ஆண்கள்.
2. வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு, வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதாரணம் இரயில் எஞ்சின் ஓட்டுநர்கள்.
சில சுற்று வட்டாரங்களில் கடினத்தன்மை அதிகம் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டி இருப்பவர்களுக்கு (STONE BELT AREAS). உதாரணமாக இராமநாதபுரம் மாவட்டம்.
3. குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகக்கல் வந்திருந்தால்.
4. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
5. தண்ணீர் மிகவும் குறைவாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
6. சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள்.
7. மிகச் சிலருக்கு கற்களை உருவாக்கும் இரசாயனங்களான கால்சியம், யூரிக்ஆசிட் இரத்தத்தில் அதிகமாக இருந்தால்.

No comments

Powered by Blogger.