அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அணுகுண்டுகள் நெதர்லாந்தில் பதுக்கிவைப்பு
அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஜியாக்ரபி என்ற சேனலின் செய்தி படத்திற்காக பேட்டியளித்த லுபர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
'1982 முதல் 94 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் பர்பண்ட் நகரில் உள்ள வோல்கெல் விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
2013 வரை அவை இங்கேயே இருக்கும் என நான் நினைத்ததில்லை' என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட 4 மடங்கு வீரியம் கொண்ட அணுகுண்டுகளை அமெரிக்கா நெதர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளது என்று நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அளித்துள்ள பேட்டி, அந்த வாதத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

The Most wanted Criminals in the world US Government
ReplyDelete