மன்னர் அப்துல்லாவின் எச்சரிக்கை
"சில நாடுகள் தொடர் ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வதோடு மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலையிடுகிறார்கள், இது பிராந்தியத்தில் பதற்றத்தினையும் உறுதியற்ற நிலைப்பாட்டினையும் உருவாக்கும்" என்று இரு புனித ஹரம் ஷரீபின் பொறுப்பாளரான மன்னர் அப்துல்லா நேற்று எச்சரித்தார்.
சிரியாவில் தொடரும் படுகொலைக்களரி, மனித உரிமைகளுக்கு எதிரான பரவலான அத்துமீறல்கள், அம்மக்களுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகள் ஆகிய நிகழ்ச்சிகளின் விளைவுகள் பற்றி மீளாய்வு செய்யப்பட்டது.
சர்வதேச இஸ்லாமிய ஊடக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் அஹ்தாழ் மன்னரின் இவ்வறிக்கையினை வரவேற்றதுடன் "இது இஸ்லாமிய உலகின் சமாதானத்தினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பலப்படுத்தும் ஒரு பிரதிபலிப்பு" என்று குறிப்பிட்டார்.
அரபு செய்திக்கு கருத்து தெரிவித்த அவர், ஹிஸ்புள்ளாவினதும் ஈரானின் ஆயுதரீதியான உதவியும் சிரியாவில் தொடரும் வன்முறைகளை தூண்டிவிடுகின்றது.இது அப்பிராந்தியத்தின் எல்லா பகுதியிலும் ஸ்திரமற்ற நிலையை உண்டாக்குவதுடன் பதற்றநிலையும் உண்டு பண்ணுகிறது.
புதிய ஜனாதிபதி சீர்திருத்தவாதி ஹசன் ரவ்ஹாணி இன் தலைமையில் சிரியாவிற்கான ஈரானின் அரசியல் கொள்கை மாற்றத்தினை சவூதி வரவேற்கிறது என்றார் அஹ்தாழ்."நாங்கள் ஹசன் ரவ்ஹாணியிடமிருந்து சிரியாவிற்கான ஜனநாயகத்தினையும் அறிவு சார்ந்த ஒரு நிலைப்பாட்டினையும் எதிர்பாக்கிறோம்.பசார் அல்- ஆசாத் தனது மக்களை தானே கொன்று குவிக்கின்றார்" எனக்குறிப்பிட்டார்.
அதிகரித்த ஹஜ் பயணிகளை உள்வாங்குமுகமாக இரு புனித தலங்களை விஸ்தரிக்கும் இந்த முயற்சியை இரட்டிப்பாக்குமாறும் அதற்கான அனைத்து வளங்களையும் பாவித்து துரிதப்படுத்துமாறும் அதிகாரசபைகளை மன்னர் அப்துல்லா வேண்டிக்கொண்டார்.இந்த இரு மஸ்ஜித்களின் கட்டிட விரிவாக்கம் பற்றியும், "மத்தாப்" ( கஹ்பாவைச் சுற்றியுள்ள தவாப் செய்யும் பரிதி வடிவ பகுதி) பற்றியும் மதீனாவின் புனித சூழல் விச்தைப்பு பற்றியும் அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டது என கலாச்சார தகவல்கள் அமைச்சர் அப்துல் அஸீஸ் ஹோஜா தெரிவித்தார்.
புனித மக்கா ஹரம் ஷரீப் 2.2 மில்லியன் மக்கள் சுற்று வளம் வருமளவு விஸ்தரிக்கபடுவதுடன் புனித நபியவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஒரே நேரத்தில் 2 மில்லியன் மக்கள் தொழும் அளவு விஸ்தரிக்கப்படும்.

சிரியாவில் மக்களைக் கொன்று குவிப்பது பசர் அசட் என்று கூறும் மன்னரே! உங்கள் கண்கள் குருட்டுக் கண்களா? உங்கள் செவிகள் செவிட்டுச் செவிகளா? அங்கு மக்களையும் அரச படைகளையும் கொன்று குவிப்பது, தாலிபான்களும் அல்கைதா தீவிரவாதிகளும் என்ற உண்மையை எத்தனை நாட்களுக்கு மறைக்கப் போகிறீர்கள்? இந்த தாலிபான்களுக்கும் அல்கைதாக்களுக்கும் போதிய ஆயுதங்களை வழங்குவது நீங்கள் என்பது உலகுக்குத் தெரியாதென்றா எண்ணிக் கொண்டீர்கள்? அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் மூளையற்ற உங்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு முஸ்லிம் உலகில் செய்து வரும் அட்டூழியங்கள் பற்றி உலக முஸ்லிம்களுக்கு ஒன்றும் தெரியாதென்றா எண்ணிக் கொண்டீர்கள்? பஹ்ரைனில் உங்களது பெருந்தொகையான ஆயுதப் படைகளை அனுப்பி அங்குள்ள மக்களைக் கொன்று குவித்து வரும் நீங்கள் இப்படியெல்லாம் மனித உரிமைகள் பற்றியும் பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவது பற்றியும் விமர்சிப்பதற்கும் கதைப்பதற்கும் எவ்வித அருகதையுமற்றவர். அமெரிக்காவின் வாலைப் பிடித்துக் கொண்டு, உங்கள் பதவியையும் படாடோபத்தையும் பாதுகாத்துக் கொள்வதை மட்டுமே நோக்காகக் கொண்டு வாழ்ந்து வரும் நீங்கள், அவ்வப்போது, அமெரிக்கா எழுதித் தரும் இப்படியான வார்த்தைகளைப் பேசிவிடுவது நகைச்சுவையானது. ஆனாலும் அல்குர்ஆனை ஒழுங்காக ஓதத் தெரியாத நீங்கள், அமெரிக்காவின் அறிக்கைகளை மட்டும் பிழையில்லாத வாசிக்கத் தெரிந்திருப்பது உங்கள் அமெரிக்கப் பற்றையும் விசுவாசத்தையும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றது. உங்களைப் போன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை மக்காவுக்கும் விடுதலையில்லை. கஃபாவுக்கும் கண்ணியமில்லை. ஆனாலும் உங்களைப் போன்ற முனாபிக்குகளையெல்லாம் அழித்தொழிக்க ஒருவர் விரைவில் வருவார். அவர்தான் இமாம் மஹ்தி (அலை).
ReplyDeletehow isreal treat our people sawdi as a enemy .....iran is a hero keep in mind coin two side one isreal other side iran both same . i request to our ullamas think practically do needfully
ReplyDeleteயார் இந்த பாத்திமா? இப்படியான விமர்சனங்களை ஏன் நீங்கள் பிரசுரிக்கிறீகள் உண்மைக்கு புறம்பான கூட்டத்தை சார்ந்த இந்த தஸ்லீமாக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கவேண்டாம் தயவு செய்து சமூகத்தை மார்க்கத்தை குழப்புவோர்களது செய்திகளை இங்கு பதிவு செய்யாமல் இருப்பது நல்லது இது கருத்து சுதந்திரம் அல்ல உண்மையை பேசுவதில் கருத்து சுதந்திரம் வேண்டும் அதற்கு புறம்பான விடயத்தில் குழப்பமே உள்ளது.
ReplyDeletewell said , Fathima hamdha. Saudi USA and its allies are responsible for what is happening in Sirya.
ReplyDeleteயார் இந்தக்குழந்தை பாத்திமா ஹம்தா எனற பெயரில்?
ReplyDeleteMr. Ranees & Mr. Naleem!
ReplyDeleteIf you are not aware of world politics, you have an excellent teacher to learn. That is Hamdha!!!!
America, Soudi Arabia and Isreal jointly feeding to the anti government forces, Iran and hisbullah support to the government of Siriya. Please use your sense!!!!
very good Mr fairoz. thay dont know what america doing in this world
ReplyDelete