ஆசிரியை முழங்காலில் நின்ற விவகாரம் சூடுபிடிக்கிறது (வீடியோ)
புத்தளம், நவகத்தேகம நவோதயா மகா வித்தியாலம் இன்று (17) காலை தற்காலியமாக மூடப்பட்டுள்ளது. வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பாடசாலை மூடப்பட்டுள்ளது. புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர், பாடசாலையை இன்று மூடுவதற்கு தீர்மானித்தார்.
பாடசாலை மாணவிகள் சிலர் குட்டை சீருடை அணிந்திருந்த நிலையில் அறிவுறுத்தல் விடுத்த ஆசிரியையை கடந்த 14ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கினார். இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று (17) ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
அதேவேளை குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.
Post a Comment