ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷனினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷனினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனை பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு 1இலட்சத்து 20ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு பூநொச்சிமுனை பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் கச்சிமுஹம்மது தலைமையில் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷனின் பிரதம பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் கிழக்கு மாகாண இணைப்பாளர் குறைஷ்,பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலய அதிபர் றசூல், பூநொச்சிமுனை பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாக சபை செயலாளர் உள்ளிட்ட நிருவாகிகள்,பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 1இலட்சத்து 20ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்த பள்ளிவாயல் குர்ஆன் மதரசாவுக்கான கட்டிடம் மிக விரைவில் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.
இதேவேளை பூநொச்சிமுனை பிர்தௌஸ் பள்ளிக்கும் 52ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment