Header Ads



அம்பாறை மாவட்ட சமாதான செயற்பாட்டுக்குழுவின் கூட்டம்


(ஏ பி எம் அஸ்ஹர்)

அம்பாறை மாவட்ட சமாதான செயற்பாட்டுக்குழுவின் கூட்டம் இன்று 15-06-2013 அட்டாளைச்சேனை ட்ரூ விஷன் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அம்பாறை மாவட்ட சமாதான செயற்பாட்டுக்குழுவின் தலைவர் எம். எச். எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாட்டில் நிலவும் இன்றய அரசியல் சூல்நிலை தொடர்பாகவும் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களிடையே தொடர்ந்தும் சமாதான செயற்பாட்டுகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் ‘பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு’ விளிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 

இதில் குழுவின் செயலாளர் அஷ்ஷேஹ் ஏ. பி. எம். அஸ்ஹர் ஸலபி, ட்ரூ விஷன் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம். ஏ. சி. எம். உவைஸ், விழுது அமைப்பின் செயல்திட்ட இணைப்பாளர் சாஹிறா இஸ்மாயில், தேசிய சமாதான பேரவையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மௌலவி    எ. எம். றம்ஸி உட்படமூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி  பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.