Header Ads



புலிகளை பின்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தால் அரசு பொறுத்துக் கொண்டிருக்காது

விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.  ஆனால், இந்த விவகாரத்தை பின்தள்ளிப் போடலாம். அது தமிழ் மக்களுக்கு தீங்கானது. எதைச் செய்ய வேண்டுமானாலும், அவர்கள் தெரிவுக்குழு முன் தோன்ற வேண்டும்.  தற்போதைய பிரச்சினைக்கு அரசாங்கத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தனித்து தீர்வு காணமுடியாது. 

அவர்கள் ஒரு ஜனநாயக வழிமுறைக்கு வந்தால், அந்த வழியிலேயே தொடர்ந்து நிற்க வேண்டும்.  விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், சிறிலங்கா அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.  அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. 

என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆகமொத்தத்தில் சிறுபான்மையினருக்கு எந்தவகையிலும் உரிமைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்பதுதான் உங்கள் கருந்து.

    ReplyDelete

Powered by Blogger.