முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக மீண்டும் என்.எம். அமீன் தெரிவு
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக என்.எம்.அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் விதிகளின்படி ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடாதவிடத்து அவர்களை தெரிவு செய்வதற்கான அதிகாரம் செயற்குழுவை சார்ந்துள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம், 14 ஆம் திகதி கூடிய முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு மீண்டும் அமீனை தலைவராக தெரிவு செய்துள்ளது.
இதேவேளை இம்முறை முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் பதவிக்கு ரஷீத் எம். ஹபீள் மற்றும் றிப்தி அலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பொருளார் பதவிக்கு மீரா இஸ்ஸத்தீனும், பாயிஸும் போட்டியிடவுள்ளனர்.
இவர்களுடன் 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment