எரியும் மதவாத அராஜகத்தை தேசியசூறா சபை அணைக்காது - அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்
(அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத் உலமா சபைத் தலைவர் ஜமாலி)
இன்று இலங்கையில் தலைவரித்தாடும் மதவாத அராஜகமானது காட்டு மிராண்டித்தனமானதாகும். இதை நாகரீகம் படைத்த மனித சமூகம் அங்கீகரிக்கப் போவதில்லை. இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்களோ அல்லது பெரும்பாலான பௌத்த பிக்குகளோ இதை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் கூட பிற்போக்குவாத அற்பசொற்ப பிக்குமார்களின் இந்த அராஜகத்தை கண்டு வெட்கப்படுகின்றனர்.
ஆயினும் பதவியிலிருக்கும் அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. 30 வருட காலப் பாசிசப் புலிகளின் யுத்தத்திற்கு முடிவு கண்டவர்கள் இதை நிறுத்தத் தவறியது வேதனைக்குரியதாகும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் வேதனைப்படுகின்றனர். இது அரசின் மீது பலத்த சந்தேகத்தையும் அதிரிப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதுதொடர்பாக முஸ்லிம்கள் விழிப்பாகவும், விவேகமாகவும் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும். அதே நேரம் முஸ்லிம் சமயத் தலைவர்கள் அவர்கள் தலைமை தாங்கும் ஜம்மியதுல் உலமா சபை இன்றுவரை எவ்வாறு முஸ்லிம்களை வழிநடத்தி வந்திருக்கிறார்கள் என்பதை ஆராய்வது அவசியமாகும். அவர்கள் இலங்கையின் முழு முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்களா? இல்லையா என்பதும் கேள்விக்குறியாகும்.
தற்போது இலங்கையின் உலமா சபை உட்பட இன்னும் பல முஸ்லிம் இயக்கங்கள் இணைந்து தேசிய சூறா சபை ஒன்றை நிறுவும் அவசியத்தைப் பேசி வருகின்றனர். (இதை நான் எழுதும் வரை அவர்கள் அந்த சூறா சபையை நிறுவி விட்டார்களோ தெரியாது.) அவ்வாறானதொரு சூறா சபையானது இன்று முஸ்லிம்களை பிளவுபடுத்தி வரும் இயக்கங்களுக்கு மேலதிகமாக இன்னுமொரு இயக்கத்தை அதிகரித்து இருக்குமே தவிர, அச்சபையால் சாதிக்கப்படுவது ஒன்றுமே இல்லை என்பதுதான் ஆணித்தரமான உண்மையாகும். இது தலைவலிக்கு தலையணைமாற்றும் கதை போன்றதாகும். இவ்வாறு அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபைத்தலைவர் பந்நூல் ஆசிரியர் மௌலவி அல்ஹாஜ். றபியுதீன் ஜமாலி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அவர் கூறியவதாவது, இலங்கை மட்டுமல்ல. முழு உலகிலும் முஸ்லிம்களின் பலத்தை எப்படி பலயீனப்படுத்தலாம் என்பதை வருடக்கணக்காக சிந்தித்து ஒரு முடிவை மேற்குலகம் எட்டியிருக்கின்றது. அவர்கள் கண்ட முடிவுதான்
1. முஸ்லிம்களின் ஆன்மீக பலத்தை அழிப்பது
2. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது
3. அவர்களுக்குள் இயக்கங்களை உருவாக்குவது
4. அடுத்த சமூகத்திற்குள் இவர்களைக் காட்டிக் கொடுத்து மோத விடுவது என்பனவாகும்.
இதுபோன்ற அனேக திட்டங்களை அவரகள் வைத்திருக்கின்றனர்.
இன்று எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்குள் ஆன்மீகம் தொலைக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் எமது ஆன்மீக வழிகாட்டிகள் எமது முன்னோர்களான ஆன்மீக அரசர்களான இமாம்களாவர் இன்று அவர்கள் தூக்கி வீசப்பட்டு விட்டனர். குர்ஆனையும், ஹதீதுகளையும் இதுகால வரை பாதுகாத்துத் தந்த அவர்கள் மீது சந்தேகங்களும், தாண்தோன்றித் தனமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு நிலைமை நீடித்தால் எமது பின் சந்ததியினர்களுக்கு வரலாறுகள் இல்லாது போய்விடும். வரலாறு அழிக்கப்பட்ட சமூகத்தையே மேற்கு நாட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று முஸ்லிம்களுக்குள் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. முஸ்லிம்கள் குழுக்குழுவாகப் பிரிக்கப்பட்டு விட்டனர். இவர்களிடம் ஆன்மீகம் சாகடிக்கப்பட்டு வெறும் பகுத்தறிவு வாதம் மாத்திரம் தான் மிஞ்சி இருக்கின்றது. இவ்வாறான பகுத்தறிவுவாத இயக்கங்களின் முன்னணி இயக்கம்தான் ஷஷமுஃதஸிலா|| என்ற வழிகெட்ட இயக்கமாகும். இப்பிரிவுகள் எமக்குத் தேவையில்லை. இன்று இயக்கங்கள் மலிந்து அவர்கள் பிரத்தியேகமாக
1. பள்ளிவாசல்கள்
2. மர்கஸ்கள்
3. வழிகாட்டல் நிலையங்கள்
4. ஆராய்ச்சி மையங்கள்
5. பயிற்சி மன்றங்கள்
6. ஷபாப் அமைப்புக்கள்
7. தௌஹீத் இயக்கங்கள்
8. தப்லீக் இயக்கங்கள்
9. ஜமாஅத் இஸ்லாமி இயக்கங்கள்
10. ஜமா அத் முஸ்லிம் இயக்கங்கள்
11. ஜமாஅத் அன்சார் முஹம்மதியா இயக்கங்கள் முதலியவைகளை உருவாக்கி இருக்கின்றனர்.
இவைகள் மலிந்து பட்டியல் நீண்டு செல்கின்றது. அத்துடன் நில்லாது அவர்களுக்கென்று ஆண்கள், பெண்கள் என்று வேறாக கொள்கை பரப்பு மத்ரஸாக்கள் வளாகங்கள் எல்லாம் கட்டப்பட்டு விட்டன. இன்னும் கட்டப்பட்டு வருகின்றன. இப்படியான பிரிவுகளைத் தான் மேற்கு நாட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மேற்கு நாட்டவர்கள்தான் இவர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டு வருகின்றனர்.
அண்மையில் மியன்மாரில் பௌத்தர்களைத் தூண்டி அங்கு வாழ் முஸ்லிம்கள் மத்தியில் கலவரத்தை உருவாக்கி முஸ்லிம்களை அழிக்க உதவியர்களும் இந்த மேற்கு நாட்டவர்கள்தான். இதே மேற்கு நாட்டவர்கள் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்துடன் சமய ரீதியான கருத்துக்களை முன்வைத்து ஒருபோராட்டத்தை முடிக்கி விட்டுள்ளனர். அவர்களே இவர்களுக்கும் பணம் வழங்கி வருகின்றனர். முஸ்லிம்களுக்குள் முஸ்லிம்கள் பிரிந்து செல்வதையும் அதேநேரம் மற்றுமொரு சமூகத்துடன் மோதலை ஏற்படுத்தவும் இந்த மேற்கு நாட்டவர்கள்தான் தேவையான ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர்.
எமக்கு அறபு உலகம் இமாம்களும் அல்ல. வேதமும் அல்ல. எமது வழிகாட்டிகள் இறை நேசர்களான இமாம்களும், மத்ஹபுகளும்தான். இவர்கள்தான் குர்ஆனையும், ஹதீதுகளையும் கற்றுத் தந்தவர்கள். இலங்கையில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் அழிக்கப்படவேண்டும். அவர்களின் கொள்கை பரப்பும் மத்ரஸாக்கள் அகற்றப்பட வேண்டும். இதைவிட வேறொன்றுமே எமக்கு விமோசனம் தரப்போவதில்லை. அதேபோல இன்னுமொரு சூறா சபைத் தேவையில்லை.
1980ம் ஆண்டுக்கு முன் இலங்கையில் முஸ்லிம்கள் எவ்வாறு ஒற்றுமைப் பட்டிருந்தார்களோ ஒரே அமைப்பில் இருந்தார்களோ அந்த அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும்.
ஆன்மீகம் என்பது பகுத்தறிவு வாதத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏனென்றால் பகுத்தறிவின் மூலம் விஞ்ஞானிகளாகத் திகழும் அறிஞர்கள் கூட மனநிம்மதி தேடி ஆன்மீகத்தின் பக்கமே வந்து கொண்டிருக்கின்றனர். பகுத்தறிவுதான் மார்க்கம் என்றால் எமது வரலாற்றின் ஆரம்ப கால யுத்தங்களில் முஸ்லிம்கள் வென்றிருக்க முடியாது. இவ்வாறு பெருவிருட்சமாக முழு உலகிலும் முஸ்லிம்கள் விரிவடைந்திருக்க முடியாது. இதைக் கருத்திற்கொண்டு அனைத்து இயக்கங்களையும் ஒழித்து ஒற்றுமைப்பட்ட ஒரு சமூகமாக வாழ்வதற்கு ஜம்மியதுல் உலமாக சபை உட்பட அனைவரும் முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு மௌலவி அல்ஹாஜ் றபியுதீன் ஜமாலி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஒங்குட விளக்கம் , எல்லா நாயும் மார்க்கெட்டுக்கு போஹுது என்டு வழி நாயும் பொஇசாம் போல. இந்த விமர்சனங்கள் , குத்தி காட்டல் , குறை கூறல் போன்ற மனப்பாங்கை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, சமுகத்தை ஒற்றுமை படுத்தி, ஒன்றாக செஎட்பட முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteI think i don't need to remind you about the last hadith in Sahiul buhari , of on Quran thfseer, where Imma Shafi talks about learning Quran when eevry one are in same min set and mentality.
if you differ in your ideas about Quran and its knowledge, please keep it close, and look after the unity of society make any movement to harm it.
You guys are having PhD in religion , but not even primary/ basic knowledge about society, unity an relationship.
Go and read about hadiths of Rahamtul Aalameen Seidiina Mohamath Rasooluulah's on society and unity.
Read about incident of Immamuna Moosa(PBUH) and Immamuna Haroon(PBUH), when Moosa(PBUH) returned from hill thoorsina.
Dear Bro n Sisters
You follow any tharika or name it and call it anything you want, but remember when come to society and unity, you sacrifices your group and sect. please come together and think together.
HOLD UNITY TIGHTLY.
May almighty Allah forgive out sins and make us unit under one leader and provide us safety and good leadership to over come communal and racial abuses and attacks.
There is some sense in it. Jammiyahtul Ulama should and must liberalize its thoughts free from hidden agenda. Transparency and honesty in addressing issues concerning Muslims are paramount important, if they are, to take a lead role in guiding all muslims in the country.
ReplyDeleteBasically, if one among many sects of muslims were to question about jammiyathul Ulama's credibility, the answer would not be identical and many would negate the organisation. This is sad and questionable.
The body of Jammiyathul Ulam is in the center of everyone's focus. It would be feasible to build on on the reputation it had earlier but.. unless they devise a common mechanism acceptable to all, any would be success is unforeseeable. from THE UNITED KINGDOM.
ஞானசேரவினை சந்தித்து (இஸ்லாமிய இயக்கங்கள்பற்றிய)ஞானமூட்டிய (இஸ்லாமிய இயக்கங்கள்பற்றிய) ஞானிகளல்லோ (பரம்பரை முஸ்லிம்கள்?) நீங்க....!!
ReplyDeleteDear Gunta sloppy,
ReplyDeleteA kind advice to you; the letter emphasis the importance of being one group under one flag. Whether you accept it or not, it is the fact that all muslims were one faith, one belief and one community about 30 years (3 decades) ago.
Touch your heart and ask yourself the question, simply, How many groups in a single and one family, today? Need I to tell you that there will be more than one; wife with one doctrine, father with a different one and the children are with third belief.
I think you were trying to say in your letter the MIND SET, well, today the Jewish, Christians, etc., learning the quran with the state of mind similar to what you have mentioned. Outcome of their learning is what you see today in their world being appallingly divided. Interestingly, this is what exactly going on in Sri Lanka.
Some of your quotes from Hadith does not fit in here at all. I politely request that you be cautious when making reference to Prophet's saying whether it's in the context or do not quote them, at all,please.
We must be careful when making interpretation on our own as it will distract the faithful to wrong footing, if you are in a faith.
We do not want these kind of traitors to our society. This Guy looks like a BBS agent. Ghanasara might have offered him a lump sum.
ReplyDeleteபொது பல சேனா சுட்டிக்காட்டுகின்ற பாரம்பரிய முஸ்லீம்கள் நாங்கள்தான் என்பதனையும் பொது பல சேனா வுடன் ஒன்று சேர்ந்து உழைப்பதற்கு நாங்கள் களமிறங்கியுள்ளோம் என்பதனையும் ஜமாலி அவர்கள் தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்திவிட்டார். ஜமாலி அவர்களே இஸலாமிய இயக்கங்களை கருவறுப்பதற்காகவே நீங்கள் பொதுபல சேனாவுடன் கைகோர்த்து சமூகத்தினை் காட்டிக் கொடுக்குறீர்கள். ஆனால் அவனுகள் உங்களைப் பயன்படுத்தியே உங்களை அழிக்கிறானுகள் என்பதனை உங்களால் புரிய முடியவில்லை. உங்களின் கதிர்காமத் தலங்களுக்கு என்னவாகிவிட்டது என்பதனை பார்த்தீர்களா? பொது பல சேனா உங்களுடன் சேர்ந்து உங்களை அழிக்கிறது. இதனைப் ரபுரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட உங்கள் ஜமாஅத் அறிவூட்டப்படாமல் பாமரத் தனமான கூட்டமாகியுள்ளது. நீங்கள் உங்களை ஒரு ஜமாஅத் என்று அறிக்கை விடுகிறீர்கள் நீங்கள் மொத்தம் ஏழே ஏழு நபர்கள்தாம் என்பது பலருக்கம் தெரிந்த விடயம்தான். உங்களுக்குள்ளேயே நாளைக்கொரு சண்டை வேளைக்கொரு சமரசம். இந்த இலட்சனத்தில் மார்க்கப் பணி செய்கின்ற ஜமாஅத்துக்கள் பற்றி எழுதுவதற்கு உங்களுக்கு தகுதி உண்டா?
ReplyDeleteYes ofcourse no need groups in ISLAM.
ReplyDeleteEVERYBODY MUST OBEY ALLAH AND RADUL sal.
Quran and sunna.
No need shafi hanafi hanbali ahmad madhab also. We can follow direct teaching from SUNNAH. we can take imaams ideas and sujjustions but when they have ideas out of quran sunnah we must away of it and must follow which is in WAY OF MUHAMMAD sal.
OUR WAY THARIQA MUST BE THARIQA OF MUHAMMED SAL. THARIQA
OUR MADHAB MUST BE MADHAB OF MUHAMMADU RASULULLAHS MADHAB.
ONLY THAT WILL GUIDE U TO PARADISE.
ALL OTHERS THARIQA AND MADHAB AWAY FROM WAY OF MUHAMMAD SAL.
ALLAH ACCEPTS ONLY WAY OF MUHAMMAD SAL.
SO WE MUST CARE TO FOLLOW WICH IS ROGHT WAY
My dear
ReplyDeleteU said that 30 years b4 there were no groups.
But my father says b4 they had lot of thariqas and fights . In india lot of fights between shafi hanafi. Bora ect.
Here shaduliya kaadiriya alaviya laksabandiya maula hubbu ect..
Dont try to hide fast.
உலமா சபை என்று பெயரை வைத்துக்கொண்டு ''எமது வழிகாட்டி இறை நேசர்களான இமாம்களும், மத்ஹபுகளும்'' என்று கூறுகிறீர்களே! குர்ஆனும், நபி வழியும் என்று கூற மனமில்லையே. உங்கள் உலமா சபையை உங்கள் ஊருக்குள்ளே வைத்துக் கொண்டால் நல்லது..இது தான் உங்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத். உங்கள் Letter head மட்டும் தான் உங்களுக்கு பயனளிக்கும் போலுள்ளது.
ReplyDeleteInda letter he'd enge porukkiyadu ????? Inda jamaattudaya aal taan anda janaadipadi aalisahar !!!! Irahasiyam purindawarhalukku inda waarttayyin arttam puriyum ! Inda jamaali koora waruwadutaan enna anaittu masjiduhalilum ziyaaram katta wendum enbada ? Alladu Ella muslimgalum kabru wananga wendum enbada ??????
ReplyDeleteமாஷா அல்லாஹ் இவர்களை தவிர மற்ற எல்லோரையும் சோ்திவிட்டார்கள்
ReplyDeleteஇவர்கள் தான் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவர்கள்
இவர்களுடன் சுற்றும் ஆசாத் சாலியின் சகோதரர் தான் இவ்வாரு பட்டியிலிட்டு சிங்களப் பத்திரிகையில் கட்டுரை எழுதியவர்
இங்கு அமையப்போகும் தேசிய சூரா சபையில் பிரதான பங்கு ஜமிய்யதுல் உலமவிற்கே உரியது அதிலும் குறிப்பாக இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயம்களில் முழுப்பொறுப்பும் ஜமிய்யதுல் உலமவையே சாரும் மேலதிகமாக நாட்டில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஜமிய்யாவும் சேர்ந்த துறை சார் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முடிவுகள் எட்டப்படும் என்றுதான் எம்மால் அறியமுடிகிறது, நீங்களும் விரும்பினால் இணைந்துகொள்ளலாம் ஆனால் உங்கள் அறிக்கையை பார்க்கும்போது நீங்கள்தான் முழு ஆலோசனையும் வழங்கி தகவலும் கொடுத்து பொது பல சேனாவிற்கு ஆலோசகர் போன்று அல்லவே தெரிகிறது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காபிர்களுக்கு பயப்படுவதை விட உடன் இருக்கும் முனாபிக்களுக்குத்தான் அதிகம் பயப்பட்டார்கள். முதலில் நீங்கள் இஸ்லாத்தை பூரணமாக புரிந்து கொள்ள முயற்சிக்கவும் காபிர்களிடம் இருந்து முதலில் இஸ்லாமியர்களை காப்பாற்றுவோம் அப்புறம் உள்வீட்டுப்பிரச்சினையை பாப்போம்
ReplyDelete"தேசிய சூறா சபை" அதனது ஆரம்பக் கட்டங்களில் இருக்கின்றது. இது சமூக ஒற்றுமைக்கும், சமூகப்பாதுகாப்பிற்குமான அமைப்பாகவே அடையாளப்படுத்தப்ப்டுகின்றது. சூறா சபை அதன் முதல் பணியாக இனவாதிகளை எதிர்கொள்தல் என்னும் பணியை எடுத்துக்கொள்ளாது என நான் நம்புகின்றேன். தேசிய சூறா சபை அமைவதில் பல அமைப்புகள் முன்னின்று செயற்படுவதை எம்மால் காண முடிகின்றது. இங்கே ஒரு செய்தி மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது. அதாவது இலங்கையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் (ஜம் இயதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் காங்கிரஸ்) இலங்கை முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தல் என்னும் வேலைத்திட்டத்தில் தாம் தனித்து தோல்வியடைந்துவிட்டோம் என்பதை மறைமுககமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். எனவே சமூகப்பாதுகாப்பிற்காக தாம் கூட்டிணைய வேண்டும் என்ற தேவையை உணர்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் இணைகின்றபோது பல்வேறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள், செய்ற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியும். இந்நிலையில் ஓரணியில் இணையும் முஸ்லிம் உம்மத்தை எதிர்க்க, அல்லது விமர்சிக்க ஒரு சிலர் முன்வருகின்றார்கள். இவர்களுள் இரண்டு வகை இருக்கின்றார்கள் ஒரு சாரார் அறியாமையால் எதிர்க்கின்றவர்கள் இவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். இன்னுமொரு சாரார் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்ப்பவர்கள், இவர்கள் சிலபோது கைக்கூலிகளாக இருக்க முடியும். இவர்களை இனங்கண்டு மண்டையில் போடுதல் என்னும் தமிழ் போராளிகளிடம் வழக்கிலிருந்த ஒரு செயன்முறை அவசியப்படுமா என நாம் ஆலோசிக்க வேண்டிய தேவையுடன் இருக்கின்றோம்.
ReplyDeleteஜமாலிக்கு என்னத்துக்கு இலங்கை விவகாரம். தின்ன வந்தா தின்டுட்டு போகாமா பொது பல சேனாவுக்கும் அடியாளா இருக்க ஐடியா... சோத்துகளுக்கு எங்கே நலவு தெரியும்.
ReplyDeleteFirst of all I would like to express that I’m very disappointed about this article. Though there are some good comments for the need of unity, the way he looks to reach is really bad.
ReplyDeleteI totally agreed with Manithan and Seyed mmsa,
I didn’t understand his direct criticism to ACJU without indicating any allegations or incidents. As a neutralized person I observed that the ACJU played a very efficient role during the issues. The question is, where was such people and such statements to lead Muslim community during such crucial period of time? Why he makes a question about acknowledgement of ACJU as a leading body of SriLankan Muslims, so it emphasize his personal conflict with the ACJU.
First the editor should understand Shura Board is not a new movement of belief or principles. It’s a affiliation and umbrella body of different groups with different beliefs or principles/ movements. So my question is how there can be conflicts when all movement sitting together to work for common issues?
But I totally agreed with auditor what he said about the intention and strategies of western power against Islam and his argument for need of unity.
He should understand the Shoora board is an initiative for building unity and solidarity to handle with common and communal issues. It’s open to everyone to give their opinions when they are member in the board. If he is really wondering about the need of unity why doesn’t he join the board? I don't understand the fact behind his criticism against the ACJU.
If he is trying to say all these movements are creations of western power, what about his movement? What is the guarantee for it to assure that is independent.
Its show his guilty from his words of all the madhrasa and religious institution should be collapsed, it is not the option for solidarity, but trying to find similarities in diversity is the best way for solidarity.
Spirituality and faith of religion is very important. But we should understand the knowledge and intellectual wisdom is important to understand and acknowledge the spirituality and faith of religion in different context.
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
ReplyDeleteநான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது
ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.
இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.
தவம் செய்ய வேண்டும்!!!
தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!
தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!
நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.
இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.
திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
லிங்க்ஐ படியுங்க.
http://tamil.vallalyaar.com/?page_id=80
blogs
sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in
video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg