13 ஐ ஒழிக்க இந்தியா அனுமதிக்காது - தமிழ் கூட்டமைப்பிடம் பிரதமர் மன்மோகன் சிங்
(Un) இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு இந்தியா ஒருபோதும் ஆதரவு வழங்காது. அதை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எம்மாலான உதவிகளை வழங்குவோம்.
இவ்வாறு நேற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைப் புதுடில்லியில் இருந்து பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
புதுடில்லியின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை 5 மணிக்குத் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதில் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் உடனிருந்தார். இதன்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகள், வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு நடவடிக்கைகள், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மன்மோகன் சிங் கூட்டமைப்பினரிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் முயன்று வருகின்றோம் என்று கூறியுள்ளார்.
.jpg)
Post a Comment