கிழக்கின் ஆச்சரியமிக்க நகரமாக கல்முனை - ஹரீஸ் நடவடிக்கை
(எஸ்.அஷ்ரப்கான்)
கிழக்கின் ஆச்சரியமிக்க நகரமாக கல்முனை நகரினை மாற்றும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸினால் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேராவுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்தே மேற்படி குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்தனர்.
இக்குழுவில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டவுள்யூ.ஜே.செனவிரட்ன, கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம்.முர்சிதா மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதன்போது புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரச காரியாலய மற்றும் வர்த்தக நிலையங்களின் அமைவிடங்களையும் மற்றும் பூங்கா நிர்மாணம், நகர அழகுபடுத்தல் வேலைத்திட்டங்;களையும் குழுவினர் பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

எலும்பிட்டான் ஐயா எழும்பிட்டான்....கு.....கர்ணன் இனியென்ன.....மீண்டும் இதுபோல் ஓர் அறிக்கை வரும்வரை நாம் நன்கு தூங்கி எழும்பலாம்.......
ReplyDeleteஇந்த திட்டம் இவர்தான் செய்ரமாதிரி ஒரு போட்டோவும் போட்டுட்டா நாங்க நம்பிருவம் என்ட நெனப்பு போல.........
ReplyDeleteஇந்த நகர அபிவிருத்தி திட்டம் என்ன என்டு எங்களுக்கெல்லாருக்கும் நல்லா தெரியும்.....
மனிசனுக்கு பசி வார மாதிரி.....
நகர அபிவிருத்திக்கு........
நகர அபிவிருத்தி அதிகார சபை... அபிவிருத்தி வேலைத்திட்டங்களினை மேற்கொண்டே ஆகும்.....
அதுக்குத்தான் போட்டோவில முன்னுக்கு நிக்கிற அதிகாரிகள் இருக்கிறாங்க.
"ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை" இது நாட்டு மக்களை ஆச்சரியமான மடையர்களாய் ஆக்க மகிந்த பாவித்த ஏமாற்று சொற்றொடர்.
ReplyDelete" கிழக்கின் ஆச்சரியம் கல்முனை " இது கல்முனை மக்களை ஆச்சரியமான மடையர்களாய் நினைத்து ஹரீஸ் இன்று பாவிக்க தொடங்கி இருக்கும் சொற்றொடர்..
ஆச்சரியமான இலங்கை எதுவென்று இன்று நாடும் உலகமும் நன்கறிந்துவிட்டது
ஆச்சரியமான கல்முனை எதுவென்று நாளை கிழக்கும் கல்முனையும் நன்கறியும் அல்லது அதை இன்றே அறிந்திருக்கும்..
ஹரீசின் இந்த நரி நகர்வை 13ம் திருத்த சட்டத்துக்கு வாக்களித்துவிட்டு அவரும் அவரும் அவர் சார்ந்த கட்சியும் கூறப்போகும் புளிச்ச கதையிலிருந்து மடயர்களாகிய மக்கள் நாம் உணர்ந்துகொள்ளலாம்..
யா அல்லாஹ்..! இந்த குள்ள நரி கூட்டத்திடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பாயாக...