Header Ads



நாட்டில் இனவாதமும், மதவாதமும் தலைவிரித்தாடுகிறது - பொது எதிர்க்கட்சிகள்

என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடருமாயின் இன்னும் இரு தசாப்தங்களுக்குள் உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும்'' என்று  பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஐக்கிய  தேசியக் கட்சியின் தொழிற்சங்க பணிமனையில் நேற்று இடம் பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மௌபிம மக்கள் கட்சியின் உப செயலாளர் சமரவீர வீரவன்னி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும்  தெரிவித்ததாவது:

"தற்போதே நாட்டில்  இன, மத வாதங்கள் அதிகமாகத் தலை தூக்கியுள்ளன. இதனால்தான் உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.  ஒரு நாட்டிலுள்ள இரு இனங்களுக்கிடையில் பிரச்சினை தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்குமானால், அந்த  நாடு உலக நாடுகளின் தலையீட்டால் இரண்டாகப் பிரிந்து தனிநாடு உருவாவதை கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம்.

இலங்கையும் அதுபோலவே இரண்டாகப் பிரிக்கப்படும் அபாயத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது.  இன்னும் இரு தசாப்தங்களில் உலக நாடுகளின் தலையீட்டுடன்,  இலங்கை இரண்டாகப் பிளவுபடும்  அபாயம் ஏற்படலாம்.   எனவே அரசு இன, மத ரீதியிலான பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முன்வர வேண்டும்  என்றார்.  un

1 comment:

  1. இது அரசாங்கம்தான் நடத்துகின்றது அனைவரும்தெரிந்த உண்மைதானே, காலம் கடந்தபின் ஒன்றும் செய்யமுடியாது மெளனமாகவுள்ள மக்கள்மீது அரசாங்கம் இன்னுமொரு போரைதிணிக்க நினைக்கின்றதா அப்படியாயின் இலங்கைக்கு அழிவுதான் என்பது நிச்சயம் உடனே இலங்கை அரசாங்கம் இத்போன்ற கையாலாகாத வேலைகளை புத்திசுயாதீனமில்லாத முட்டாள்களுக்கு காசுகொடுத்து பேசவைப்பதை நிறுத்தவேண்டும் அல்லது புத்தி ஜீவிகளும் அனைத்து தலைவர்களும் பெரியோர்களும் சேர்ந்து இந்த அரசாங்கத்தை உடனே மாற்றுவதற்கு ஆவனசெய்யவேண்டும். நாட்டில் இன்னுமொரு போரை உருவாக்க அரசாங்கமே வழிகளை அமைத்துவருகின்றது இது என்னவோ அரசாங்கத்தின் சுயதேவைக்காக இருக்கலாம் இருப்பினும் தற்போது அரசாங்கம் என்று சொல்லிக்கொள்வது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் பல அங்கத்தவர்களேதான் அவர்களின் சுயதேவைக்காகவும் இலாபத்திற்காகவும் நாட்டை சூறையாடினார்கள் யாரும் கண்டும் காணாமல் இருந்தோம் ஆனால் இதுபோன்ற யுத்தங்களின் ஏற்பாடுகளுக்கு ஒருபோதும் சம்மதிக்கமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.