சட்டமா..? உயிரா..??
பென்சில்வேனியாவை சேர்ந்த சிறுமி சாரா முர்னாகன் (10). இவளுக்கு நுரையீரலில் கோளாறு ஏற்பட்டது. எனவே, இவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.
எனவே, இவளுக்கு உடனடியாக நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவெடுத்தனர். அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுமி சாராவுக்கு 30 வயதுக்கு மேற்பட்ட நபரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டது. ஆனால் இதை அவளுக்கு பொறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஏனெனில், அமெரிக்க சட்டப்படி சிறுவர்களுக்கு பெரியவர்களின் உடல் உறுப்புகள் பொருத்தக் கூடாது. அவ்வாறு பொறுத்துவதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், சாராவுக்கும் மாற்று நுரையீரல் பொருத்தாவிட்டால் இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்ற சூழ்நிலை இருந்தது.
இதுகுறித்த தகவல் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சிறுமியின் உயிரை காப்பாற்ற அமெரிக்க அரசு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என சுமார் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து சாராவின் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஆய்வு செய்த கோர்ட் சிறுமியின் உயிரை காப்பாற் மாற்று நுரையீரல் ஆபரேசனுக்கு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து சிறுமி சாராவுக்கு உடனடியாக ஆபரேசன் மூலம் நுரையீரல் மாற்று ஆபரேசன் நடந்தது. இதன் மூலம் அவள் உயிர் பிழைத்தாள். அவளது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Post a Comment