இங்கிலாந்தில் திருடர்களிடம் நகைகளை பறிகொடுத்தவரா நீங்கள்..?
தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கெண்ட் நகர போலீசார், திருடர்களிடம் இருந்து கைப்பற்றிய 5 லட்சத்து 10 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 4 கோடியே 61 லட்சம்) நகைகளின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
லண்டன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக கைப்பைகளை பறித்துச் செல்லும் திருடர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை எல்லாம் புகைப்படம் எடுத்து தங்களது இணையதளத்தில் கெண்ட் நகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நகை குவியலில் ஆசியாவில் உள்ள பெண்கள் அணிவதைப் போன்ற எழில் மிகு வேலைப்பாட்டுடன் கூடிய வளையல்கள், நெக்லஸ், ஆடம்பர தங்க கைக்கடிகாரங்கள் ஆகியவை உள்ளன.
‘திருடர்களிடம் நகைகளை பறிகொடுத்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த நகைகளில் உங்கள் நகையும் இருக்கலாம் என கருதும்பட்சத்தில் அதற்கான ஆதாரத்தை அளித்து நகையை பெற்றுச் செல்லலாம்’ என விளம்பரப் படுத்தியுள்ளனர்.

Post a Comment