Header Ads



புத்தளம் மாவட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை

(ஏ.எல்.ஜுனைதீன்)

    புத்தளம் மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 1 இலட்சத்து 52 ஆயிரத்து 280 இஸ்லாமியர்கள் வாழ்வதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் “சமயம் மற்றும் மாவட்ட ரீதியில் பிரதேச செயலாளர் பிரிவுகளின் சனத் தொகை” எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள தனது இறுதிக் கணக்கெடுப்பு புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இம் மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு,

பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
புத்தளம்
52941  பேர்
கற்பிட்டி
47113  பேர்
முந்தல்
23787  பேர்
நாத்தாண்டி
 6559  பேர்
வானத்துவில்
 6480  பேர்
சிலாபம்
 5308  பேர்
பள்ளம
 3990  பேர்
மாதம்பை
 2788  பேர்
ஆராச்சிக்கட்டு
 1402  பேர்
ஆனமடுவ
  741  பேர்
தங்கொட்டுவ
  727  பேர்
வென்னப்புவ
  379  பேர்
மகாவெவ
   30  பேர்
மகாகும்புக்கடவல
   13  பேர்
நவகத்தேகம
   12  பேர்
கறுவெலகஸ்வெவ
   10  பேர்

    இம் மாவட்டத்தில் 7 இலட்சத்து 59 ஆயிரத்து 776 பேர் மொத்தமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளி விபரத் திணைக்களத்தால் இறுதியாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


    இவர்களில் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 450 பேர் பெளத்தர்களாகவும் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 692 பேர் றோமன் கத்தோலிக்கர்களாகவும் 1 இலட்சத்து 52 ஆயிரத்து 280 பேர் இஸ்லாமியர்களாகவும் 28 ஆயிரத்து 812 பேர் இந்துக்களாகவும் 12 ஆயிரத்து 314 பேர் ஏனைய கிறிஸ்த்தவர்களாகவும் ஆயிரத்து 228 பேர் ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் எனவும் திணைக்களம் இறுதியாக வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.