Header Ads



சாதனை மாணவன் நுஸ்கி மரணமடைந்தார்..!


நிந்தவூர் அல்  அஷ்ரக்  தேசிய  பாடசாலையில் உயர்தரத்தின் வர்தகப்பிரில்  கல்வி கற்றுவந்த எம் .எஸ்.எம்.நுஸ்கி  எனும் மாணவன் இன்று கண்டி வைத்தியசாலையில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் 2011ஆம் ஆண்டிலேயே கிழக்கு மாகாண  பாடசாலைகளிற்கிடையிலான விழையாட்டுப் போட்டிகளில் முப்பாய்ச்சல் உட்பட பலபோட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தைப் பெற்று மாகாணத்தின்  முதல்தர விளையாட்டு வீரன் என்ற பட்டத்தையும் தமதாக்கிக் கொண்டார்.

கல்வியிலும் ஒழுக்கத்திலும் பணிவிலும் சிறந்து விளங்கிய  இந்த மாணவன் அதே ஆண்டு ,ஹோமாகம,மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில்  நடைபெற்ற அகில இலங்கை  பாடசாலைகளுக்கிடையிலான  விளையாட்டுப்போட்டியில்  19 வயதுப்பிரிவின் கீழ்  பங்குபற்றி ,முப்பாய்ச்சல் போட்டியிலே 14.65மீட்டர்  பாய்ந்து புதிய சாதனை படைத்தார்,தங்கப்பதக்கத்தையும் தமதாக்கிக் கொண்டு தான் பிரநிதிப்படுத்திய கிழக்கு மாகாணத்திற்கும் ,தனது பாடசாலைக்கும்  புகழை ஈட்டிக்கொடுத்தார்,

பாடசாலைக்கும், ஊருக்கும் புகழை  தேடித்தந்து விட்டு இறைவனடி எய்திய இவரது ஜனாஸா நல்லடக்கம்  நாளை 19-06-2013 காலை பாடசாலை ஆசிரியர் மாணவர்கள், ஜனாசாவைப் பார்வயிட்ட பின்னர் நிந்தவூரில்  அடக்கம் செய்யப்படும்.


14 comments:

  1. இன்னாலில்லாஹ்
    அல்லாஹ் அவர் பாவங்களை மன்னித்து
    சொர்க்கத்தை கொடுததருள்வானாக ஆமீன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    யா அல்லாஹ்! இவரின் குற்றங்களை மன்னித்து இவருக்கு அருள்புரிவாயாக. உயர்ந்த சுவனபதியை இவரின் தங்குமிடமாக ஆக்குவாயாக. பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உள்ளத்தில் பொறுமையை ஏற்படுத்துவாயாக.
    ''நிச்சயமாக அல்லாஹ் அளித்ததும் அவனுக்குரியதே. அவன் எடுத்ததும் அவனுக்குரியதே. அவனிடம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு தவனையுண்டு. எனவே, பொறுமை செய்வீராக, நன்மையை எதிர்பார்ப்பீராக'' (புகாரி)

    ReplyDelete
  3. Innalillahi vainnailahi raajioon.

    ReplyDelete
  4. May Allah Have Mercy on him

    ReplyDelete
  5. innalillahi wa-inna ilaihi raajioon.

    ReplyDelete
  6. அவர் எவ்வாறு வபாத்தானார்கள் என்று யாராவது சொல்லமுடியுமா?

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.........
    மிக இளம் வயதில் இறந்திருப்பதால் ஒரு சகோதரர் மரணம் எப்படி நிகழ்ந்தது என கேட்டிருக்கிறார்... அவரது மரணம் இருக்கும் எமக்கு பாடமாக இருக்கனும் என்பதால் சொல்கிறேன். சுமார் ஒரு வருடகாலமாக அவர் இரத்தப்புற்று நோய்க்கு உட்பட்டிருந்தார் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர் தங்களால் முடிந்தளவு சிகிச்சை செய்தார்கள் முழு இரத்தமும் அடிக்கடி மாற்றவேண்டிய சூழ்நிலையால் அடிக்கடி கண்டி வைத்தியசாலைக்கு சென்று வருவார் அவரது காலம் முடியும் சந்தர்ப்பமாக இது அமைந்து விட்டது அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் அவரது பாவங்களை மன்னித்து அந்தஸ்தை உயர்தி உயர்வான ஜன்னதுல் பிர்தௌஸில் வாழவைக்கவேண்டும்.மரணம் எப்படியும் எப்போதும் எங்கிருந்தாலும் வந்தே தீரும் என்பதால் நாம் நேரங்களை பயன்படுத்தி மறுமைக்காக எந்த நேரமும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு இந்த மரணம் ஒரு உதாரணமாக இருக்கவேண்டும். அல்லாஹ் எல்லோரையும் நல்வழிப்படுத்துவானாகவும்.

    ReplyDelete
  8. Innalillahi vahinna ilaihir rajihoon

    ReplyDelete
  9. INNALILLAHI VA INILAIHI RAJHOON.
    What is the cause for his death?

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ... அவருக்கான என் பிரார்த்தனைகள்.. இன்னும் இவரின் மரணம் இயற்கையானதா.. கொலையா.. ??

    ReplyDelete
  11. iraiva intha nanbenin pavanggalai mannithu jannathul firthoes i koduththarulvayaha! @ kalaimakan HUTHA UMAR (CHAIRMAN-KABULA FOUNDATION)

    ReplyDelete
  12. ellorum allahuvukku uriyavarhal avenideme meendum pohe weni iriki(inalillahi vainna ilaihi rajiyoon) ellorum nanmain pakkam nulaivomahe

    ReplyDelete
  13. innalillahi vainnailahi rajuhoon.

    ReplyDelete

Powered by Blogger.