முஸ்லிம் மீடியா போரம் மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் பழுலுல்லாஹ்வை கண்டுகொள்ளாதது ஏன்..?
(ரீ.எல்.ஜவ்பர்கான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது தேசிய மாநாடு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. அமைச்சர்கள், அறிவுசார் பெருந்தகைகள் என பெரும் பட்டாளமே கலந்து மகிழ்ந்திருக்கின்றன. ஆனால் மாநாட்டின் இறுதிவரை அமைப்பின் அத்திவார அங்கத்தவராக செயற்பட்ட ஒருவர் முழுமையாக மறக்கப்பட்டிருப்பது.மனசுக்குள் வேதனையை விதைத்து நிற்கிறது.
மர்ஹூம் பழுலுல்லவாஹ் முஸ்லிம் மீடியா போரத்தின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் வெகுஜனத்தொடர்பு அமைப்பு என இருந்த காலம் முதல்) ஆரம்ப கால உறுப்பினர்.நானும் பழுலுல்லாஹ்வும் ஒன்றாகச்சென்றுதான் லேக் ஹவுஸில் வைத்து அங்கத்தவரானோம்.
அத்தகைய நீளமான தொடர்புகளைக்கொண்ட பழுலுல்லாஹ் இன்றைய மாநாட்டில் கண்டு கொள்ளப்படாது விட்டது மூத்த உறுப்பினர்களை அமைப்பு எவ்வாறு மரணத்தின் பின்பும் கனம் பண்ணுகிறது என்பதற்கு பெரிய உதாரணம். பழுலுல்லாஹ் 31.11.2012ல் வபாத்தானார்.
அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது முஸ்லிம் மீடியாபோர மாநாடு இதுதான். இதில் குறைந்தது ஒரு அரங்கிற்கு அவரது பெயரையாது வைத்து மாநாட்டை நடாத்தியிருக்கலாம். அல்லது இன்று கௌரவிக்கப்பட்டவர்களுள் ஒருவராகவாவது அவரை இணைத்திருக்கலாம்.அல்லது அவரைப்பற்றியாவது ஒருவர் உரை நிகழ்த்தியிருக்கலாம். இப்படி எதுவுமே தமது உறுப்பினருக்காக செய்யாது தேசிய மாநாட்டை நிறைவு செய்திருக்கிறார்கள் என்றால் தமது ஆரம்பகால உறுப்பினர் ஒருவருக்கு செய்யும் நன்றிக்கடன் இதுதானா?
எனக்குள் ஒரு எண்ணப்பாடு இருந்தது 18வது மாநாடு மர்ஹூம் பழுலுல்லாஹ் அரங்கில்தான் நடக்குமென்று. 30வருடங்களுக்குமேல் ஊடகத்துறைக்குப் பெரும் பங்காற்றியவர். ஒருஊடகவியலாளனை தான் சார்ந்த அமைப்பே மிகக்குறுகிய காலத்துள் மறந்து விட்டதென்றால். இரவை பகலாக்கி அச்சுறுத்தல்களுக்கும், அதற்றல்களுக்கும் மத்தியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஊடகப்பணிசெய்யும் பிராந்திய ஊடகவியவாளர்களின் தியாகப்பணிகளை யார் ஞாபகித்துக் கொள்ளப்போகின்றார்கள்..?
.jpg)
இந்த நல்லெண்ணத்தை உறுப்பினரான நீங்கள் உரிய வர்களிடம் ஆலோசித்து இருக்கலாம் அல்லவா..?
ReplyDeleteஅல்லது நிகழ்ச்சி நிரலை பார்த்தாவது சம்பந்தப்பட்டவர்களிடம் இறுதி நேரத்தில் கதைத்து இரங்கல் உரையை கூட செய்து இருக்கலாம் என்பது
எனது கணிப்பு..
நீங்கள் தெரிவித்தும் ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்து இருந்தால் மனவேதனைக்குரியது என்பதில் மறுப்பே இல்லை
குறைகள் இன்றிய காரியங்கள் எதுவும் இல்லை.
பேசித் தீர்த்து ஆலோசனைகளை வழங்கி அமைப்பை மேலும் வலுப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் .
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் தேவைகளை நிறைவேற்றி உயரிய வாழ்வை அளிப்பானாக.
முதலில் இவரது பத்திரிகையின் மூலம் திரட்டப்பட்ட நிதி மூதூர் றிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு கையளிக்கப்பட்டதா? என்பதை ஸ்ரீ.ல.மு. மீடியா போரம் தனியான ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரிக்க வேண்டும்!
ReplyDeleteஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்து விட்டு அதனை தங்களது பொக்கட்டுக்களில் திணித்துக் கொண்டு இன்னொரு ஊடகவியலாளருக்காகக் குருல் எழுப்புவது கேவலம்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ககோதரர் ஜெஸீம்
ReplyDeleteகருத்து நல்லம் இருந்தாலும் முஸ்லீம் மீடியா போரத்தின் அங்கத்தவர் அல்லாதவருக்கு அதனை செய்திருக்கலாம் மர்ஹூம் பலுள்ளா நீண்டகால உறுப்பினர் குடும்பத்தவர் மரணித்தால் அதனை யார் யாரிடம் சொல்வது. ஏற்கனவே நான் எனது மனசாட்சி கருத்தை வெளியிட்டிருந்தேன் அதனை ஜப்னா முஸ்லிம் மறைத்து விட்டது மீண்டும் அதனை சொல்ல வினைகின்றேன் கிழக்கு மாகாணம் தவிர்ந்த வேறு மாகாணத்தவராக மர்ஹூம் பலுள்ளா இருந்திருந்தால் அமீன் ஹாஜியே பிரேரணையைக் கொண்டு வந்திருப்பார் இந்த புறக்கணிப்பு கிழக்கு மாகாணத்தாருக்கு தொடராக இடம் பெறுவது சகஜம்
யு.எம்.இஸ்ஹாக்
ஊடகவியலாளன்