தமிழ் இனவாத ஊடகத்திற்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் குடாநாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றிற்கு எதிராகவும், அப்பத்திரிகை முஸ்லீம்களை அபாண்டமாக விமர்சிப்பதற்கு எதிராகவும் யாழ் முஸ்லீம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 28-06-2013 மதியம் ஜீம்மா தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் ஊர்வலமாக இப்பத்திரிகைக்கெதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் நான்கு சந்தியில் வைத்து குறித்த பத்திரிகை பிரதிகளை எரித்தனர். இறுதியாக அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.



Post a Comment