கொழும்பு ரயில் பாதையில் அநாதரவான நிலையில் பெண் குழந்தை மீட்பு
(Adt) கொழும்பு - கோட்டை லேக்ஹவுஸ் கட்டிடத்திற்கு பின்னால் உள்ள ரயில் பாதையில் அநாதரவான நிலையில் இருந்த பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தைக்கு வயது ஐந்து மாதங்களே என தெரியவந்துள்ளது.
கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டனர். குழந்தை தற்போது பொரளை சிறுவர் வைத்தியசாலையில் முதலாம் வாட்டில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. கோட்டை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நல்ல வேலை இந்த பெண் குழந்தை தன் குடும்பத்தார் கொல்லவில்லை.அரசாங்கம் இந்த பிள்ளையை எனக்கு தருமானால் நான் எடுத்து வளர்ப்பேன் மசாஹல்லாஹ்!
ReplyDelete