அல்லாஹ்வின் பெயரை கூறிக்கொண்டுவந்த யூதர் சுட்டுக்கொலை
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள 'வெஸ்டர்ன் வால்' என்ற பகுதியில் யூத இன மக்கள் அங்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு தங்களின் வேண்டுதல்களை அங்குள்ள சுவற்றின் கற்களுக்கு இடையில் வைத்துவிட்டுப் போவார்கள். இங்கு அடிக்கடி பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணத்தால், ஆயுதமேந்திய காவலர்கள் எப்போதும் பாதுகாவலில் ஈடுபட்டிருப்பார்கள்.
இன்றும், அந்த நாட்டு நேரப்படி காலை 7.40 மணியளவில், புனித சுவர் அருகே நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த கழிவறையிலிருந்து வெளிவந்த ஒருவர் அல்லாவின் நாமத்தைக் கோரிக்கொண்டே சுவற்றின் அருகே வந்துள்ளார்.
அவரை பாலஸ்தீர் என்று எண்ணிய காவலர் ஒருவர் அவரைநோக்கிப் பலமுறை சுட்டுள்ளார். அவர் இறந்துவிட்டது தெரிந்ததும் அந்த இடம் ஒரு மணி நேரம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டதாகத் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறந்தவன் இஸ்ரேலிய யூத இனத்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment