Header Ads



குற்றங்களுக்கு தண்டணை வழங்குவதன் மூலமே எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியும்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

எமது பகுதிகளில் அனேகமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதையும், அது சிறுவருக்கெதிரான குற்றமாகவும் மற்றொரு வகையில் இளைஞர், யுவதிகளால் புரியப்படும் குற்றமாகவும் காணப்படுகிறது. தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அஸீஸ் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மகளிர் பணியகத்தின் அனுமதியுடன் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் இளைஞர், யுவதிகளுக்கான வாழ்க்கைத் திறனை அபிவிருத்தி செய்தல் எனும் தலைப்பிலான செயலமர்வின் போது வளவாளராக கலந்து கொண்ட அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பெரும்பாலான சிறுவர் துஸ்;பிரயோகங்கள் பொலிஸ் நிலையங்களிலும்;, ஏனைய சமூக மட்டத்திலும் விசாரணை செய்யப்பட்டாலும், அவைகள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது. இதனால் தப்புச் செய்கின்றவர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர். இதற்கு சாட்சிகள் முன்வராமை, சமுகத்தின் ஏளனமான பார்வை, ஆதாரங்கள் அழிக்கப்படல் என்பவைகள் வழக்கொன்றை தொடர்வதற்கு பலமற்ற விடயங்களாக இருக்கின்றது.

சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்களும், இளைஞர், யுவதிகளும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலமாக ஒருவரது உரிமை எத்தகைய விதத்தில் மீறப்படுகிறது என்பதை எவரும் ஆழமாக நோக்குவதில்லை.

எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல்  தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும். இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி, இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டு;ள்ளது.

ஒரு சிறுவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது, ஒருவரைத் துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது. ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

இக்குற்றத்திற்கான தண்டணையானது, பத்து வருட சிறைத் தண்டணையும்,  தண்டப்பணத்துடன் அல்லது தண்டப் பணம் இன்றி மேலும் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தமானது என கருதும் நட்டஈட்டினை கொடுக்கும்;படி நீதிபதி கட்டளையிட வாய்ப்புண்டு.

1998ம் ஆண்டின் 20ம் இலக்க சட்டத்தின் கீழ் பகிடிவதைகள் மற்றும் கல்வி நிலையங்களில் நடைபெறும் ஏனைய வன்செயல்கள் தொடர்பான விடயங்கள் குற்றம் எனக் கூறப்பட்டு;ள்ளது. பகிடிவதைக்கு உள்ளாகும் போது 10 வருடங்கள் வரை தண்டணையும் நீதிபதி பாதிக்கப்பட்டவருக்கு வழங்கக்கூடிய பொருத்தமானது எனக் கருதும் நட்டஈட்டையும் வழங்க முடியும்.

புரியப்படுகின்ற குற்றங்கள் ஒரு நபருக்கு எதிரான குற்றம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றதே தவிர, சிவில் குற்றமாக கருதப்படாமல் முழு சமுகத்திற்கும் எதிரான குற்றமாகக் கருதப்படுகின்றது. ஆகவேதான் சிறுவர் துஷ;பிரயோகம் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்கிறது.

இன்று இளைஞர் யுவதிகள் கண்மூடித்தனமாக கையடக்க தொலைபேசியினை பாவிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பின்தங்கியே காணப்படுகிறது. அதிகமாகமான இளைஞர்கள் யுவதிகளை குறுஞ் செய்திகள் மூலம் திசைதிருப்புகின்றனர். இந்த கையடக்க தொலைபேசி பாவனைக்கு அடிமையாகி வருவதால் பெற்றோர்களை இலகுவில் பகைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி நம்ப முடியாத குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருவதை  அண்மைக் கால சம்பவங்கள் விபரிக்கின்றது. குற்றவியல் சட்டத்திற்கமைவாக நீதிமன்றம் மூலம் தண்டணை வழங்கப்படுவதன் மூலமே எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியும் என அஸீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.