இலங்கையில் அமெரிக்காவின் பக்டீரியா
இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவினால் தரப்பட்ட தும்மோ பீ.டீ.ஐ பக்டீரியாவை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
முதல் கட்டமாக பொரலஸ்கமும், களனி மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் இதனை பரீட்சார்த்தமாக பயன்படுத்த தீhமானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு நோய் அதிகளவில் பரவும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் இவை முதலில் பயன்படுத்தப்படவுள்ளன. இவை மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், இதனை இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கான சலுகைகளை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment