Header Ads



துருக்கி பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நேரடி பேச்சு

துருக்கி நாட்டில் கடந்த 11 நாட்களாக பிரதமர் எர்டோகனை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இஸ்தான்புல்லில் பூங்கா ஒன்றினை கட்டிடங்கள் கட்டுவதற்காக சீரமைக்கத் தீர்மானித்தபோது, அதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அது நாளடைவில் பிரதமரை எதிர்க்கும் போராட்டமாக வலுப்பெற்றது. தக்சிம் சதுக்கம் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறைந்துள்ளனர். 

நேற்று இரவு காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன.தொடர்ந்து மூன்றாவது நாளாக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை விலக்குகின்றனர். இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  

முதலில் ஆர்ப்பாட்டக்காரர்களை கொள்ளையர்கள் என்றும், தன்னுடைய பொறுமையை சோதிக்கின்றனர் என்றும் பிரதமர் அறிக்கை விடுத்தார்.ஆனால், துணைப் பிரதமர் அரின்க், ஆர்ப்பாட்டம் நடத்தும் குழுக்களின் தலைவர்களில் சிலரை புதன்கிழமை அன்று சந்தித்து பிரச்சினைகள் பற்றிப் பேச பிரதமர் ஒத்துக்கொண்டுள்ளதாகவும், படிப்படியாக அவர் மற்றவர்களையும் சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.