ஈரான் வருடத்திற்கு 30 அணுகுண்டுகளை தயாரித்து வருகிறது - இஸ்ரேல்
ஈரான் அணு குண்டு தொழிற்சாலைகளை தொடர்ந்து கட்டி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் உளவுதுறை அமைச்சர் யுவல் ஸ்டெயின்ஸ் ஈரான் குறித்து கூறியதாவது:-
ஈரான் வருடத்திற்கு 30 அணுகுண்டுகளை தயாரித்து வருகிறது. யுரேனிய சக்திகளை மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவே பயன் படுத்தி வருகின்றது.
ஒரு அணு குண்டையல்ல நிறைய அணு ஆயுதங்களை பெறுக்கவே ஈரான் செய்ல்படுகிறது. ஈரான் அணுகுண்டுகளை உருவாக்குவதை நிறுத்தாவிட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தோம். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
ஆனால் மேற்கத்திய நாடுகளோ, அமெரிக்காவோ, நேட்டோ படைகளோ தாக்குதல் நடத்தினால் சில மணி நேரங்களிலேயே ஈரானின் நியூக்ளியர் தொழிற்சாலைகளை தாக்கி அழித்து விடமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment