இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு - சர்வதேச மீனவர் சமூக பேரவை கவலை
கடலில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக இலங்கையில் மீனவர்கள் பலர் பலியானமை குறித்து, சர்வதேச மீனவர் சமூக பேரவை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மீனவர் சமூக பேரவை தலைமையகம் அமைந்துள்ள பாகிஸ்தான் கராச்சி;யில் இருந்து அதன் செயலாளர், மொஹமட் அலி ஷா, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கையில் மீனவர் சமூகத்தினர் பலர் உயிரிழந்தமை குறித்து நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஷா கோரியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் மீனவ சமூகத்தை பாதுகாக்கும் வகையிலான உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஷா இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
Post a Comment