கிண்ணியா அல் அக்ஸா கல்லூரிக்கு 85 வருடம்
தி/கிண்ணியா அல் - அக்ஸா கல்லூரி ஆரம்பித்து 85 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இதன் 85வது வருட நிறைவையொட்டி மாபெரும் கண்காட்சி, கலைவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் போன்றன எதிர்வரும் 2013/07/04,05,06ம் திகதிகளில் நடைபெற உள்ளது. எனவே இந்நிகழ்வுகளை மிகவும் கோலாகலமாக செய்து முடிப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பழைய மாணவர்களுடைய பங்களிப்புகள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் கல்லூரி அதிபரை 0262236539 என்ற தொலைபேசி இலக்கத்தோடு அல்லது alaqshacollege.kinniya@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியோடு அல்லது alaqshacollege என்ற skype முகவரியோடு தொடர்பு கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment