பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது வசீம் அக்ரம், ரமீஸ் ராஜா, அமிர் சோகைல் சீற்றம்
""சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான தோல்வியை கண்ட பாகிஸ்தான் அணியில், மாற்றம் கொண்டுவர வேண்டும்,'' என, முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் "பி' பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் "ஹாட்ரிக்' தோல்வி கண்டு, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியது: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது வருத்தம் அளிக்கிறது. இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. ஒரு போட்டியில் கூட, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் வரை "பேட்' செய்யவில்லை. ஒட்டுமொத்தத்தில் முதுகெலும்பில்லாத பேட்டிங்கை காண முடிந்தது. இது, வெட்கக்கேடானது. வீரர்களின் செயல்பாடு மிகப் பெரிய தொடரில் விளையாடியது போல இல்லை.
எனவே பாகிஸ்தான் அணியில் மாற்றம் கொண்டுவர சரியான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கி, அணியில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் மோசமான தோல்வியில் இருந்து தப்பலாம்.
இத்தொடரில் கேப்டன் மிஸ்பா மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்தார். தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இவர் அரைசதம் அடிக்கவில்லை என்றால், சொற்ப ரன்னில் சுருண்டு, மோசமான தோல்வியை சந்தித்திருப்போம்.
வரும் காலத்தில் கேப்டன் பதவியில் இருந்து மிஸ்லா விலகியபின், புதிய கேப்டனாக "ஆல்-ரவுண்டர்' முகமது ஹபீசை நியமிக்கலாம். இவர்தான் கேப்டன் பதவிக்கு சரியான வீரர். ஆனால் இதற்கு முன் இவர், முக்கியமான போட்டியில் திறமையை நிரூபிக்க வேண்டும். அதன்பின் கேப்டனாக நியமிப்பது குறித்து முடிவு செய்யலாம். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.
சொதப்பிய பேட்டிங்
இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா கூறுகையில், ""சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. பவுலர்கள் ஓரளவு கைகொடுத்த போதிலும், பேட்டிங் எடுபடாததால், முதல் சுற்றோடு வெளியேற வேண்டியதாயிற்று. இந்திய வீரர்களிடம் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவிடம் தோல்வி கண்டுள்ளோம். அணியில் மாற்றம் கொண்டுவர சரியான நேரம் இது. அதேவேளையில், வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அப்போதுதான் "பார்மை' தக்கவைத்துக் கொள்ள முடியும்,'' என்றார்.
பாகிஸ்தான் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்துவீச்சாளர் அக்தர் கூறுகையில், ""சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அப்ரிதி, யூனிஸ் கான் போன்ற சீனியர் வீரர்களை சேர்க்காதது பின்னடைவை ஏற்படுத்தியது. போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் நிறைய இடம் பெற்றதால், இக்கட்டான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என தெரியவில்லை. அணியில் திறமையான இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருந்தால், நெருக்கடியை சமாளித்து எழுச்சி கண்டிருக்கலாம். இத்தொடரில் டேவ் வாட்மோர் பயிற்சியாளராக சோபிக்கத்தவறிவிட்டார். டாம் மூடி போன்ற திறமையான வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்,'' என்றார்.
இம்ரான் கான் மீது பாய்ச்சல்
முன்னாள் பாகிஸ்தான் வீரர் அமிர் சோகைல் கூறுகையில், ""பாகிஸ்தான் அணியின் மோசமான நிலைக்கு முன்னாள் கேப்டன் இம்ரான் கான் முக்கிய காரணம். இவர், இளம் வீரர்களிடம், பந்தை சேதப்படுத்தும் தவறான முறைக்கு ஊக்கம் அளித்தார். இது, சிறந்த பவுலர்களை உருவாக்கவிடாமல் தடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சேதப்படுத்திவிட்டார்,'' என்றார்.

Ivarhal tholuvarhal yanral ivarhal nicchayam vetri peruvarhal insha allah
ReplyDeletePakistan patti nanraha tholuvarhal yanral nicchayam vetri ataivarhai insha allah
ReplyDeletethere is inzi,please find the new photos
ReplyDeletegood work done by Mohsin khan was washed away by present coach Deve Whatmore.he did nothing to improve the quality of Pakistan's batting. other thing is that Pakistanis are nervous and cannot read the match situation. they just hit or get out.
ReplyDeleteHi Friends,
ReplyDelete1996ல் கத்துக்குட்டி அணியாக இருந்த இலங்கை அணியையே உலகக்கிண்ணம் பெற வைத்தவர் வட்மோர். அவராலே கூட நிமிர்த்தியெடுக்க முடியாதிருக்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இவர்களின் ஒத்துழையாமையையும் ஒருங்கிணைந்து செயற்படா இயல்பையும்.