குவைத் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது
குவைத் பார்லிமென்டை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கலைத்துள்ளது.குவைத் பார்லிமென்டில், 50 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும், நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 2006ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் வழி செய்தது.எதிர்க்கட்சியினர் இதை எதிர்த்தனர். இந்த சட்டப்படி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த தேர்தலை செல்லாது, என அறிவிக்கக் கோரி, வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குவைத் பார்லிமென்டை கலைத்து, புதிய தேர்தல் நடத்த நேற்று உத்தரவிட்டது.
.jpg)
Post a Comment