காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-20132 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதன் போது ஹிறா பவுண்டேன் நிறுவனத்தனின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சின் செயலாளரும், கைச்சாத்திட்டனர் அவர்களோடு இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகரும் ,சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



நாங்க சொன்ன செய்வோம் இது கைச்சாத்திட்ட நிகழ்வு இப்படி ஏன்டா எங்கட சார் opan எப்படி செய்வாரு சும்மா அதீறும்……
ReplyDeleteஇச்செயல்களில் ஈடுபடும் அனைவரின் உள்ளங்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ளவானாக.
ReplyDeletebismillahirrahmanirrahim,,,,,,,,,,allahvin arulal mudiyavanum
ReplyDeleteUruvap padaththukku munnal irunthu??????? Weldone Hisbullah
ReplyDeleteமெளலவிமார்களுக்குரிய மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி கைச்சாத்து உருவப்படத்திற்கு முன்னால்.
ReplyDeleteகரண்டைக்காலுக்கு மேல பேண்ட், வித்றுத் தொழுகை இதுமட்டும்தான் இஸ்லாம். உருவப்படம் வைப்பது???????????????
உலமாக்களுக்கான அறபுப் பல்கலைக்கழகக் கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வைபவத்தில் உலமாப் பெருமக்களையே காணவில்லையே..!
ReplyDeleteகாத்தான்குடியில் மாத்திரம் ஆயிரக்கணக்கான உலமாக்கள் உள்ளனர். அவர்களும் கூட இன்று எங்கே போய் ஒளிந்தார்கள்..?
இன்று காலை முதல் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உலமாக்கள் இந்த ஒப்பந்த வைபவத்தில் கலந்து சிறப்பிக்க வருவார்கள் என எதிர்பார்த்து அதிகளவான காலை உணவுகளைத் தயாரித்திருந்த உள்ளுர் ஹோட்டல்காரர்களுக்கு பெரிய ஏமாற்றம்!
இடமிருந்து வலமாக எண்ணிப்பார்த்தால் 25 தலைகளையும் இந்த வரவேற்பில் காண முடியாமலிருக்கின்றது..!
மண்டபத்தில் மகாஜனங்களின் வரவுக்குறைவை மறைக்க நன்கு திட்டமிட்டு முன்வரிசைப் படங்களை மாத்திரம் கெமராக்கள் பதிவு செய்து இணையதளங்களில் அரங்கேற்றியிருப்பது புகைப்படக் கலையின் திறமையைப் பறை சாற்றுகின்றது.
இம்மாம் பெரிய மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்த வைபவத்திற்கு இச்சின்னஞ்சிறிய மேசைதானா ஏற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-