சாய்ந்தமருது மையவாடிகளின் அவலநிலை
(யு.கே.காலித்தீன்)
சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாசல் மையவாடி குப்பைக்காடாக காணப்படுகின்றது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் பழமை வாய்ந்த மையவாடிகளில் ஒன்றான தக்வா பள்ளிவாசல் மையவாடி நீண்ட காலமாக கவனிப்பாறற்று கிடக்கின்றது அவ்வப்போது பொதுமக்களினதும், மீனவர்களினதும் மற்றும் பொது ஸ்தாபனங்களின் உதவியோடும் துப்பரவு செய்யப்பட்டு வந்தது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலில் இயங்கும் ஜனாஸா நலம்புரி அமைப்பின் தலைவரான வை.எம்.ஹனிபா ஆசிரியர் தலைமையில் ஓரளவு செயற்பட்டது உண்மையாகயிருந்த போதும் இன்று அவர் அதன் தலைமைப் பொருப்பிலிருந்து விலகியதன் பிற்பாடு இன்றய தலைமை பொருப்பெடுத்த போது ஜனாஸா நலம்புரி அமைப்பு எதுவித செயற்பாடும் அற்றதாக காணப்படுவதோடு பொது நிறுவனங்களினாலும், தனவந்தர்களினாலும் அல்லது பொதுமக்களினாலும் துப்பரவு செய்ய உதவவரும் போது மாத்திரம் சாய்ந்தமருது ஜனாஸா நலம்புரி அமைப்பினர் எப்படியோ அவ்விடத்திற்கு வருகை தந்து தங்களின் வேண்டுகொளின் பெயரில்தான் வேலை நடைபெருகின்றது என்று மார்பு தட்டிப்பேசுகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால வராலற்றினை பின்னோக்கி பார்க்கின்றபோது கடல்வழியாக வந்த ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த குழுவினர் 1602ம்ஆன்டு ஜூன் மாதம் 02ம் திகதி ஒல்லாந்தரது கப்பலொன்றின் தளபதியான ஜொரிஸ் வான் ஸ்பில் பேக்கன் என்பவரே சாய்ந்தமருதில் தரையிறங்கி பின்னர் சம்மாந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்து கண்டிக்கு சென்று முதலாம் விமல தர்ம சூரிய மன்னனைச் சந்தித்தாகவும் வரலாறு கூறுவதோடு இவ்வருகையின் போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தான் சந்தித்த சோனகர் மற்றும் துலுக்கர் பற்றியும் தனது நாட்குறிப்பேட்டில் விபரித்துள்ளார். மேலும் இதற்கு சாண்றாக 1062 ஆண்டில் வெளியான “ஜெனல் ஒப் ஸ்பில்வேகன்- 1062” எனும் நாவலின் 23ம் பக்கத்திலிருந்து 1997ம் ஆண்டு கே.டி. பத்திரனவின் மொழிபெயர்ப்பின் மூலம் உண்மைத்தன்மையும் சாய்ந்தமருதின் வரளாரும் காட்டப்படுகின்றது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் சுமார் 27110 சனத்தொகை பரம்பளையும் 4.65 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட மிகப் பெரிய ஊர்தான் சாய்ந்தமருது பிரதேசமாகும். இப்பரதேசத்தில் தற்போது மூன்று மையவாடிகள் மாத்திரமே காணப்படுகின்றது. அது மாத்திரமல்ல சுனாமியின் காரணமாக சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் வொலிவோரியன் வீட்டுத்திட்டம் மற்றும் இபாட் வீட்டுத்திட்டம் போன்ற குடியிருப்புக்களில் குடியிருக்கும் மக்களினது ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்காக சுமார் 2 கீலோமீட்டர் நடந்து சென்று நல்லடக்கம் செய்யவேண்டிய சூழல் உருவாகியுள்ளதுடன் குடியேரியுள்ள மக்களுக்கும் ஒரு மையவாடி தேவையாகயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல், சின்னப்பள்ளிவாசல் மற்றும் அக்பர் பள்ளிவாசல்வளவுகளிலும் தக்வா பள்ளி மையவாடியிலும் ஜனாசாக்கல் நல்லடக்கம் செய்யப்பட்டபோதும். இன்று சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல், சின்னப்பள்ளிவாசல் மற்றும் அக்பர் பள்ளிவாசல் ஆகிய வளவுகளில் நல்லடக்கம் செய்யப்படுவது முற்றாக தடைசெய்ய்பட்டுள்ளதுடன், தற்போது தக்வா பள்ளிவாசல் மையவாடி, அக்பர் பள்ளிவாசல் மையவாடி (அக்பர் பள்ளிவாசலுக்கு புரம்பாகவுள்ள மையவாடிகள் 02மாக மொத்தம் மூன்று மையவாடிகளில் மாத்திரமே ஜனாசாக்கல் நல்லடக்கம் செய்யப்டுகின்றது இம்மூன்றையும் பராமரிப்பதிலிருந்து ஒதுங்கிவரும் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலில் இயங்கும் ஜனாசா நலம்புரி அமைப்பானது தற்பொழுது பெயரலவில் இயங்கிவருகின்றது. கிராம மொழி நடையில் கூறுவதென்ரால் ஊரார் கோழி அருத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதைப் போன்றதாகும். இவர்களது செயற்பாடுதக்வா பள்ளிவாசல் மையவாடி மாத்திரமல்ல ஏனைய இரண்டு மையவாடிகளிலும் பற்றைக்காடாக காணப்படுவத்தோடு மின்குமிழ்களும் சில நேரங்களில் ஒளிராமல் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதனால் இரவு நேரங்களில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதிலும் மக்கள் சிரமத்தினை மேற்கொள்கின்றனர். இதனை கருத்திற் கொண்டு மக்களின் நன்மை கருதி உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுவார்களா? என்று இப்பிரதேச மக்கள் அங்களாக்கின்றனர்.

Post a Comment