'முஸ்லிம் நீதிய' நூலை எழுதிய கருணாரத்ன ஹேரத்தை முஸ்லிம் மீடியா போரம் கௌரவிக்கிறது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18 ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹொட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சட்ட மாஅதிபர் பாலித பெர்னாண்டோ பிரதம அதிதியாகவும் ஜாமிஆ நளீமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம். ஏ.எம் சுக்ரி சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இம் மாநாட்டில் நாட்டுக்கும் ஊடகத் துறைக்கும் சேவையாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கெளரவிக்கப்படவுள்ளனர். நாட்டின் கல்வித்துறைக்கு சிறப்பான சேவையாற்றிய மூத்த முஸ்லிம் அறிஞர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரிக்கு இங்கு விசேட கெளரவம் வழங்கப்படவுள்ளது.
மவ்பிம பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க உதயன் செய்தி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்,கானமயில்நாதன் தினக்குரல் செய்தியாளர் எம்.ஏ.எம்.நிலாம், ஊடகவியலாளர்களான ஏ.எம்.ஏ.பரீத் ஏ.எம்.வைஸ் ஆகியோரும் கெளரவிக்கப்படவுள்ளனர்.
“முஸ்லிம் நீதிய” என்ற நூலை எழுதிய சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்திற்கும் இங்கு விசேட கெளரவம் வழங்கப்படவுள்ளது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான செய்யது அஹமட் மற்றும் டொமினிகன் குடியரசின் இலங்கைக்கான கவுன்சிலர் ஜெனரலும் ரன்முத்து ஹொட்டலின் தலைவருமான அல்-ஹாஜ் ஹபீபுல்லாவும் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இம் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகாக் குழுவுக்கான தெரிவும் நடைபெறும் தலைவர் பதவிக்கு தற்போதய தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு றஷீத் எம் ஹபீழ், ரிப்தி அலி ஆகியோர் போட்டியிடுகின்றனர், பொருளாளர் பதவிக்கு மீரா இஸ்ஸதீன், எச்.எம்.பாயிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பதினைந்து செயற் குழு உறுப்பினர் , பதவிகளுக்காக 23 பேர் போட்டியிடுகின்றனர். ஜாவித் முனவ்வர், ஜனாபா மும்தாஜ் ஸரூக், தாகா முஸம்மில், கலைவாதி கலீல், இர்சாத் ஏ.காதர், எம்.பி.எம்.பைரூஸ்,மெளலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, எம் இஸட் அஹமட் முனவ்வர், எம்.எல்.லாபிர், யூ.எல்.எம்.ரியாஸ், எஸ்.எல்.அப்துல் அஸீஸ், சாதிக் சிஹான், எம்.ஏ.எம்.நிலாம், ஹில்மி முகம்மத். எச்.எம்.ஹலால்தீன், எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான், இல்யாஸ் தாஸிம், எம்.பி ஹுஸைன் பாறூக், எஸ்.ஏ.அஸ்கர்கான், எம்.கே.முபாரக் அலி. எம்.எப்.ரிபாஸ், பி.எம்.எஸ்.எம்.ராபி, ஏ.எல்.ரபீக் பிர்தெளஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக மீண்டும் அல்ஹாஜ் என்.எம். அமீன் அவர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டிருப்பது அன்னாரது கடந்த காலப் பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மாபெரும் கௌரவமாகும்.
ReplyDeleteஎனது வாழ்த்துக்களுடன் எல்லாம் வல்ல அழ்ழாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான சமூகப் பற்றையும் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-