டுபாயில் கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் (படங்கள்)
கொழும்பு சாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் வருடாந்த பொதுக் கூட்டமும் துபாயில் கடந்த 14.06.2013 அன்று செரட்டன் ஹோட்டலில் மிக விமர்சையாக இடம்பெற்றது . இந் நிகழ்ச்சியில் துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தின் கொன்சுலர் ஜெனரல் M .M . அப்துல் றஹீமும், அவரது பாரியாரும் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
பழைய நிர்வாக குழுவினர் கடந்த வருடத்திற்கான அறிக்கையை சமர்ப்பித்து துபாயில் உள்ள சாஹிரா பழைய மாணவர்களின் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் கணக்கு அறிக்கையையும் சமர்ப்பித்தனர் . கல்லூரியை பற்றி சிறிய விளக்கமும் காண்பிக்கப்பட்டது. புதிய நிர்வாக குழுவினர் சகோதரர் ( f ) பிராஸ் தலைமையில் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்ச்சியில் உரையாற்றிய அப்துல் ரஹீம்,
இவ்வாறான பழைய மாணவர் அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் துபாய் சாஹிரா பழைய மாணவர்களின் முயற்ச்சியையும் பாராட்டினார். துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் இயங்கும் பழைய மாணவர் அமைப்பானது கொழும்பு சாஹிரா கல்லூரியின் அபிவிருத்திக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்கும் அதேசமயம் துபாயிலும் மற்றும் இலங்கையிலும் உள்ள தேவையுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் அமைப்பாகவும் இயங்கவேண்டும் என்றும் அதற்க்காக தனது அலுவலகம் ஒத்தாசைகளை வழங்கும் என்றும் எடுத்துரைத்தார் . மேலும் இவ்வாறான பழைய மாணவர் அமைப்புக்கள் துபாயில் உருவாகி அவர்களின் பாடசாலைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்குவது அக்கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம் என்றும் கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட கொழும்பு சாஹிரா பழைய மாணவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சி இராப்போசன வைபவத்துடன் நிறைவுற்றது.



Nice pictures....
ReplyDeleteColorful pictures....
Take the Stats.... Educational performance comparing other leading school in colombo....;
Gentleman... take this as 'Serious Mission' as;
1 st priority as 'EDUCATION'
2 nd priority as 'EDUCATION'
3 rd priority as 'EDUCATION'
Be a role model capital shcool to our Ummah.