Header Ads



ஜனாதிபதி மஹிந்த பழிவாங்கிவிட்டார் - ரவூப் ஹக்கீம் ஆத்திரம்


(எம்.வை.அமீர்)

பதின்மூன்றாவது திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் முஸ்லீம் காங்கிரசை விட்டுவிட்டு ஒரு தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. இது பாரதுரமான ஒரு விடயமாகும். அது அரசியல் சாதுரியமும் அல்ல. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அடியும் ஆகும்.  அது இலங்கையின் 18வது திருத்தச்சட்டத்தில் மூன்றாவது தடவை போட்டியிடுவதற்கு  இந்த ஜனாதிபதிக்கு தாங்கள் கொடுத்த ஆதரவுக்கு அவர் செய்த பரோபகாரமாக இப்படியானதொரு பழிவாங்கலை ஜனாதிபதி செய்துள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனையில், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற 51 வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக ‘கல்முனைக்கு வெளிச்சம்’ எனும் பெயரில் 2013.06.21ல் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நள்ளிரவையும் தாண்டி இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தின் போதே மேற்கண்ட விடயங்களை அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம்,

இந்த தெரிவுக்குழுவுக்கு உள்ள நம்பகத்தன்மையை குறைந்த பட்சம் முஸ்லீம் காங்கிரசை இணைத்தாவது பெற்றிருக்கலாம். அல்லது இனியாவது இணைத்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அந்த தெரிவுக்குழுவின் யோசனைகளை  குப்பையில் போடட்டும். என்று கூறிய ஹக்கீம் குறைந்தபட்சம் முஸ்லீம் காங்கிரசின் பிரசன்னமும் இல்லாத தெரிவுக்குழுவின் யோசனையை சர்வதேசம் எவ்வாறு நோக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். 

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சி ஒரு மாமூலான அரசியல்  கட்சி மாத்திரம் அல்ல என்று கூறிய அமைச்சர் அது அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கம். அந்த விடுதலை இயக்கத்தின் இயல்பு தானாகவே சமூகத்தின் விடுதலை பற்றியே யோசிக்கும்.  என்று கூறிய அமைச்சர் இன்றைய சுழலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அவர்களது ஆசைகளுக்கு தீனி போட வேண்டிய அவசியமில்லை என்றும் தேவையான சந்தர்ப்பத்தில் காத்திரமான முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

கிழக்குமாகாண சபை தேர்தலின் போது மற்றவர்களுடன் இணைந்து அரசாங்கத்தை விட்டுவிலகி விடுவார்கள் என பலர் எதிர்பார்த்ததாகவும் எதிர்காலத்தை உணர்ந்தே இந்த இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளுடன் அரசுடன் இருப்பதாகவும் அப்போது தமிழ் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசை தூற்றியதகவும் பல இழப்புகளுடன் அரசுடன் இருக்கும் இந்த சுழலில் அமைச்சரவையிலும் அரசாங்கத்துடனும் விவாதிக்க முடிவதாகவும் பேசிய ஹக்கீம் தற்போது தமிழ் ஊடகங்களும் தலைவர்களும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினர் விடயத்தில் விழிப்பாகவே இருக்கும் என்று தெரிவித்த அமைச்சர் முதலில் நாங்கள் ஒற்ற கருத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசில் உள்ள சில சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்பட எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவாளிக்கலாம் இன்னும் சிலர் மௌனமாக இருக்கலாம் ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அதன் இயல்பான அரசியலையே செய்யும் என்றும் தெரிவித்தார்.

வட கிழக்கு முஸ்லீம்களை பாதுகாக்க செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படும் என்றும் கல்முனையில் ஹரீஸ் செய்கின்ற அபிவிருத்தி வேலைகள், மற்றையவர்கள் செய்கின்ற காட்டிக்கொடுப்புக்கு கிடைக்கின்ற பரிசாக அமைவது போன்றதல்ல என்றும் தெரிவித்தார்.

கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக்கட்சி கடுகிக்கும் கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் சிறி லங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆங்காங்கே கொஞ்சப்பேர் ஏதோ கொண்டு செல்வதாகவும் பேசிய ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலன் பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வீண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

13வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும் திருத்தங்களை கொண்டுவர முற்பட்டாலும் அந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் பின்னர் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் இருப்பதாகவும் இது நடக்கப்போகும் காரியம் இல்லை என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லீம்களின் அதிக பெரும்பான்மையை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தங்களுடன் இருக்கின்றது என்பதை நினைத்து ஜனாதிபதி பெருமைப்பட வேண்டுமேயன்றி ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசை சிறுமைப்படுத்த எத்தனிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டர். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என்றும் கூறிமுடித்தார்.

19 comments:

  1. please do first what you are saying infront of people

    ReplyDelete
  2. Mr. hakkim uneta padicha paadangal niraiya iruku, nee paechula vallavan endu ellorukum terium, parpom enne nadaka pohuthundu........

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று கூடினால் இந்த தலை வேதனைகள் ஒன்றும் வராது என்று இப்பொழுதாவது விளங்கட்டும். ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப்பிடிக்கும் படி அல்லா கூறிய கூற்றின் கருத்தை இப்பொழுதாவது விளங்கி அதன் படி ஒன்று கூட அணைத்து முஸ்லிம் இயக்கங்களும், கட்சிகளும், அமைப்புகளும் முன் வர வேண்டும் .

    ReplyDelete
  4. SARIYAANA NAERATHHIL KAATHHIRAMAANA MUDIVAI EDUPPEERHAL ENRA NAMBIKKAI ULLATHU.......

    ReplyDelete
  5. மதிப்புக்குரிய தலைவர் அவர்களே!
    உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள்.ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் உங்களை பழிவாங்கியது இதுதான் முதல்தடவயைா?

    ReplyDelete
  6. சி.மு.கா அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கம்? அந்த விடுதலை இயக்கத்தின் இயல்பு , தானாகவே சமூகத்தின் விடுதலை பற்றியே யோசிக்கும் ..... மற்றும் ,சரியான நேரத்தில் சரியான முடிவைஎடுப்போம் என்றெல்லாம் பிதற்றுகின்றீர்களே! பள்ளி வாயல்கள் உடைக்கப்பட வில்லை,தாக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறப்பட்ட போது மௌனம் காத்தீர்களே!ஏன் ஹக்கைக்கூறுவதற்கு கடப்பாடுள்ள நீங்கள் ஒருவார்த்தையேனும் மறுப்புக்கூறவில்லை? உங்கள் முஸ்லிம் சகோதரிகளின் அபாயாக்கள் நிகாபுக்கள் புர்காக்கள் கயவர்களால் கழட்டி வீசப்பட்டபோதும் .முஸ்லிம் சகோதரனின்- இஸ்லாமிய சின்னமான தொப்பி கழப்பட்டு , காவாலிகளால் காலால் மிதிக்கப்பட்ட போதும் ,எங்கே சென்றது உங்கள் விடுதலை உணர்வு?அண்ட சராசரங்களின் ஏகனான அல்லாஹ்வின் (லப்ழுல் ஜலாலஹ்)கண்ணியமிக்கப்பெயர் பன்றியின் உருவத்தில் எழுதப்பட்டு கொடும்பாவி எரிக்கப்பட்டதே! அந்நேரத்தில் உங்கள் விடுதலையுணர்வு எங்கே தூங்கிகிடந்தது?உங்கள் ஈமானோடு உங்கள் மனச்சாட்சி மானபங்கப்படவில்லையா? அன்நேரம் எங்கே சென்றது உங்கள் சுதந்திர வேட்கை?ஓஒ நீங்கள் எல்லாம் அரசியல் வாதிகளல்லவா? அரசியலுக்குபின்புதான் சில நேரம் இஸ்லாத்தைப்பற்றிச்சிந்திப்பீர்கள் உலகியல் இலாபமிருந்தால்.இன்ஷா அல்லாஹ் மறுமையில் உங்கள் புதினங்களை -உங்கள் நயவஞ்சகத்தனங்களை,நாங்கள் பார்க்கத்தானே போகிறோம்.ஏன் உஙகளை அல்லாஹ் த ஆலா இந்த உலகதிலேயே தண்டிக்கப்போதுமானவன்.

    ReplyDelete
  7. "சுட்டும் விரலால் எதிரியைக்காட்டி
    குற்றம் கூறுகையில் - மற்றும் மூன்று விரல்கள்
    உங்கள் மார்பினைக் காட்டுதடா...?" -Kannadhashan

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Specially Raufhakeem and Ranilvikramasinga un suitable Leader in srilanka muslims this is the he is a fact big cheater.
    Specially kalmunai people pls very careful he is destroying asraf sir thoughts Ambitions.

    ReplyDelete
  10. Specially Raufhakeem and Ranilvikramasinga un suitable Leader in srilanka muslims this is the he is a fact big cheater.
    Specially kalmunai people pls very careful he is destroying asraf sir thoughts Ambitions.

    ReplyDelete
  11. tharuvukkulu oru sallakkasu ithil kalanthukondal anna kalanthukollavittal anna thayvailla sir

    ReplyDelete
  12. Muslim congress not there WHEN Halal problem arise, now no need at all, PORUKKU ILLADA VAALL PILAKA WETATAWA. nO NEED TO WORRY ON THIS

    ReplyDelete
  13. You forgot Muslim people when they had problems in halal, abaya and mosques you did talk for them, but when you have problems for you and your friends you come in front of the people to beg the sympathy. What a shame, I think you know that you have done something wrong.

    ReplyDelete
  14. நீங்கள் கூறும் சரியான நேரத்தில் சரியான முடிவென்பது ....சரியான தொகையுடன் பிழையான நேரத்திலும் வந்தாலும் சரியாகும் தானே.....???

    ReplyDelete
  15. 'கல்முனைக்கு வெளிச்சம்' என்ற மேடையில் 'ஸ்ரீ.ல.மு.காவுக்கு இருட்டு' என்பதை றவூப் ஹககீம் பொரிந்து தள்ளியிருக்கின்றார். அவ்வளவுதான்!

    தெரிவுக்குழுவில் ஸ்ரீ.ல.மு.கா.வை அரசு ஓரங்கட்டியது மாத்திரம்தான் இவரது பார்வையில் பாரதூரமான விடயமாகத் தெரிகிறது. இவர்களையும் அரசு சேர்த்துக் கொண்டிருந்தால் 'முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் இல்லை' என்றோ அல்லது 'முஸ்லிம்களை அரசு கௌரவப்படுத்தியுள்ளது' என்றோ சராசரி அரசியல் வியாபாரியின் பாணியில் இவரும் அறிக்கை வட்டிருப்பார்.

    அதென்ன ஸ்ரீ.ல.மு.கா.வின் தனித்துவமான அரசியல் சாதுரியம்...? கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவின் பின் கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிராத அரசியல் சாதுரியம்?

    இவர் நாட்டின் நீதியமைச்சராக இருந்து கொண்டே நள்ளிரவையும் தாண்டி சட்டத்திற்கு முரணாக உரையாற்றியுள்ளார். இப்படித்தான் காத்தான்குடியிலும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சட்டவிரோதமாக காலங் கடந்து பேசியதுடன் கள்ள வானொலியையும், பிரதான வீதியில் பாங்கு சொல்வதை ஒலிபரப்ப இணைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார்.

    ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் ஒரு மக்கள் சந்திப்பை நடாத்த முறைப்படி, சட்டப்படி அனுமதி கேட்டும் பொலிசார் அனுமதி கொடுக்கவில்லை இப்படியான அரசியல்வாதிகளின் அழுத்தங்களினால்.

    இப்படி சட்டத்தையும், நீதியையும் ஒரு தலைப்பட்சமாகப் பிரயோகிக்கும் நீங்களெல்லாம் அரசாங்கத்துடன் ஆட்சியில் இருந்தால்தான் என்ன? தெருவில் நின்றால்தான் என்ன?

    கிழக்குத் தேர்தல் முடிந்த பின் இவரது கட்சி அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுக் கொடுத்தது சர்வதேசத்தின் நோக்கங்களுக்காகவா? சமூகத்தின் நோக்கம் அரசுக்கு ஆதரவளிக்க கூடாது என்றிருந்தது. அதனால்தான் வெற்றிலைக்கு அள்ளிப் போடாமல் மரத்துக் போட்டுத் தொலைத்தார்கள்.

    18வது திருத்தம், திவிநெகும சட்டம் போன்ற அடிமைச் சாசனங்களுக்கு எல்லாம் ஆதரவளித்து விட்டு இப்போது விடுதலை இயக்கம் என்று சொல்கிறார். வெட்கமாயில்லை..?

    அரசை விட்டு ஸ்ரீ.ல.மு.கா. விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்த நேரத்தில் எல்லாம் நீங்கள் விலகவில்லை. இப்போது மக்கள் யாரும் அப்படி எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் நீங்கள் விலகப் போகிறீர்கள் போல் தெரிகிறது.

    அதனால்தான் ஏதோ உங்களுக்கு மக்களுக்கு அழுத்தம் கொடுப்பது போல் ஒரு மாயையை முன்கூட்டியே உருவாக்குகிறீர்கள். நீங்கள் தயவு செய்து அரசை விட்டு விலகி விட வேண்டாம் என்றே நானும் கேட்டுக் கொள்கின்றேன்.

    கிழக்குத் தேர்தலில் உங்களின் மடத்தனமான முடிவை தமிழ்த் தலைவர்கள் மாத்திரமன்றி முஸ்லிம் ஊடகங்களும், முஸ்லிம் தலைவர்களும் கூட கண்டித்து விமர்சித்ததை ஏன் இப்படி பட்டவர்த்தனமாக வரலாற்றில் மறைக்க முயல்கின்றீர்கள்?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  16. SIR,
    NEENGAL ARASAI VITTU VELYIL VARA MUDIYAATHU, VANTHAAL UNGAL ANAITHTHU WANDAPAALANGALUM VELI VARUM.

    ReplyDelete
  17. Dear Public,
    Hakeem speak in Tamil in front of Kalmunai makkal. When he goes to President., he hand shake with President and enjoy his time with him. He never talk in Singhala either in Parliament or other than East area nor in front of President. This is the fact of SLMC.

    Every plan of Government will move forward smoothly without any obstacles with SLMC’s hidden support adn agenda. Wait and see.

    When Baseer take oath as cabinet ministry, Hakeem said, I don’t know about this appointment. President neve discussed with me. This happened while I was in foreign.

    Now the same pattern, Hakeem will issue the statement “Government took decision regarding 13th issue while we, SLMC out of the committee and we can’t accept it”.

    Can anyone say, such late statement will be useful after sanction he issue???

    SLMC is fooling East people and EST people fooled by all politicians.

    ReplyDelete
  18. தலைவர் அவர்களே இவ்வளவு காலமும் உங்களுக்குத் தெரியாதா? நீங்கல்லாம் ஒரே குட்டைல பிறந்த மட்டைகள்.

    ReplyDelete
  19. Naangal muslim porumaiyaha irukka veandum.awarhalthan(arasangam and pothubalasena)manithafimanamatramuraiyil nadakinrarhal,naangalum awarhalponru seyalpatral ninaithuparkamudiyatha alivai santhika nearidum.slmc leader hakkeem sir,awarai kuraikuruwathil inipayanillai.awar slmc mp marhalai thakkawaithukolwathatkaha arasudan inaiyavendiya soolnilai.So pls nammidam niraiya kuraihal irukurathu......

    ReplyDelete

Powered by Blogger.