Header Ads



மஹிந்தவின் குடும்பத்தையும், சகோதரர்களையும் திருத்த ஒழுக்கக்கோவை அவசியம்

(Vi) நாட்டு மக்களுக்கு ஒழுக்கக் கோவை தற்போது அவசியம் அல்ல மாறாக ஜனாதிபதிக்கும் அவரது சகாக்களுக்குமே அவசியமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை ஆட்சிசெய்யும் ஜனாதிபதியில் இருந்து அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதி வரை நாட்டு மக்களுக்கு தீங்கிழைக்கின்றனர். அதனை நாம் கடந்த காலங்களில் இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்தல் மற்றும் ஆசிரியரை முழங்காலில் நிறுத்தி வைத்தல் போன்ற பல சம்பவங்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு அரசாங்கம் மக்களின் மனங்களை வேறு திசைக்கு மாற்றப் பார்க்கின்றது. இந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெறும் செயற்பாடுகளினால் நாட்டுக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டில் சிவில் நிர்வாகம் என்பது கிடையாது. ஒரு குடும்பத்தின் விருப்பத்திற்கே நாட்டில் ஆட்சி இடம்பெறுகின்றது.

எனவே நாட்டை ஆட்சிசெய்யும் அரசாங்கம் நாட்டு மக்களை திருத்துவதற்கு முதல் தனது குடும்பத்தையும் சகோதரர்களையும் திருத்த வேண்டும். அத்துடன் அவர்களுக்கே ஒழுக்கக் கோவையும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இதத்தான் நாங்க ஆரம்பத்தில இருந்து சொல்றம், ஒழுங்கு கற்றுக்கொடுப்பதற்கு இது தருணமல்ல அவங்களை வீட்டுக்கனுப்புங்க அப்பதான் நாடு உருப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.