Header Ads



துருக்கி பிரதமர் பின்வாங்கினாரா..?

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அமைந்துள்ள பழமையான கெசி பூங்காவினை மறுசீரமைப்பு செய்து, வணிக வளாகம் கட்டும் அரசின் முடிவை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாகவும், பிரதமர் எர்டோகனின் 
இஸ்லாமியப் போக்கினை எதிர்க்கும் போராட்டமாகவும் மாறியது. அரசினை எதிர்த்து பல தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

பூங்காவின் அருகில் உள்ள தக்சிம் சதுக்கத்தில் கூடிய மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். காவல்துறை இவர்களைக் கலைக்க பலவிதத்தில் முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் போராட்டக் குழு அமைப்பான தக்சிம் சாலிடாரிட்டி குழு தலைவர்களுடன் பிரதமர் எர்டோகன் நேற்று இரவு தலைநகர் அங்காராவில் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பின் பொதுமக்களின் வாக்கெடுப்பில் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குழுவின் உறுப்பினர் டைபுன் கஹ்ரமன், ஆர்ப்பாட்டக்காரர்கள் இது குறித்த முடிவினை இன்று வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார். 

ஆனால், அரசின் இந்த அறிவிப்பு மக்களை பூங்காவில் இருந்து வெளியேற்றும் என்று பிரதமர் நினைத்தபோதிலும், மக்களின் உணர்ச்சிகரமான போராட்டம் தொடர்கிறது. கடந்த மே 31ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில், இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. One thing is clear. who is bottom of this mischief ? Think my dear brothers and sisters. Who do not want to the ISLAM come to up .

    ReplyDelete
  2. Without doubt, uncle Sam and his illigal child.

    ReplyDelete
  3. இஸ்லாத்தை எதிர்க்கும் கூட்டத்தின் அருவருடிகளின் காழ்ப்புணர்ச்சி என்பதை மிகத்தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்வார்கள் மேலும் துருக்கிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி துருக்கிய பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்குவதற்கு மேற்கும்,வடக்கும்,கிழக்கும் எடுத்த முயற்சிகள் கைகூடாத கையாகாலா தன்மையின் வெளிப்பாடு தான் இந்த எதிர்ப்பு போராட்டம்,இது இஸ்லாத்தை விரும்பாத இரு கட்சிகளின் ஊடாக எற்படுத்தப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.