Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு!

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில அமைப்புகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த உடகவியலாளர் சந்திப்பு இன்று (20) பிற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் சமுகத்துக்கு எதிரான செயற்பாடுகளில் சில பொளத்த அமைப்புக்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தும். இது தொடர்பில் உரிய அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

7 comments:

  1. Sholvathu sheyalil kaanoom

    ReplyDelete
  2. ஒரு புல்லும் அப்படி நடக்காது அப்பட்டமான பொய், என்னவோ அரசாங்கத்துக்கு சம்மந்தமில்லாத குளுக்கள்தான் முஸ்லிம்களுக்கெதிராக பிரச்சினைகளில் ஈடுபடுவது சொல்கின்றார்கள் இதெல்லாம் ஒரு வெளிப்பூசல்தானே தவிர இதையெல்லாம் நாங்கள் காதில் போடத்தயாருமில்லை உங்கள் யாரையும் நம்பவுமில்லை.

    ReplyDelete
  3. Their just joking government silently watching and helping to BBS.

    ReplyDelete
  4. Another election on the way, so just a word from the minister to make the Muslims fool.

    ReplyDelete
  5. Hi Friends,

    "பாட்டும் நாமே... பாவமும் நாமே.. கேட்கும் உமக்கெல்லாம் காதில் பூ வைப்போமே..."

    இப்படி ஒரு பாட்டை தனது தொடைகளிலே தட்டிக்கொண்டு மைக் முன்னே அமர்ந்து அமைச்சர் அவர்கள் பாடாத குறைதான்.

    ReplyDelete
  6. ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு கட்டளை இட்டால் இப்பிரச்சினை ஏற்படாது. கோட்டபாயவுக்கு கட்டளை இடுங்களேன் பார்ப்போம்.தங்களின் துனிச்சலை.

    ReplyDelete

Powered by Blogger.